கலைஞரின் சட்டமன்ற உரைகள்
107
முதல் அமைச்சரும், அங்கே இல்லை, அமைச்சரும் அங்கே இல்லை என்று சொல்லி, அமைச்சர் திரும்பி வருகிற அவல நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 1973-வது ஆண்டிலே நீங்கள் 100 டி.எம்.சி. யாவது தண்ணீர் பெற்றிருந்தால், இன்றைக்கு நெற்களஞ்சியம் என்று சொல்லப்படுகிற, நெல்லை உற்பத்தி செய்கிற.....
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே!, 300 டி.எம்.சி. தண்ணீர் தருவதாகவும், அதை ஒத்துக்கொள்ள முடியாது என்று ஒப்பந்தத்திலே கையெழுத்துப் போடாமல் வந்து விட்டதாகவும், மாண்புமிகு உறுப்பினர் பேசுகிறார் எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு அப்படிப் பேசுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. உண்மைக்குப் புறம்பான செய்தியை அவையிலே கூறி. மக்களைக் குழப்புவது நல்லதல்ல. நான் பலமுறை, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பேசியிருக்கிறேன். காவிரிப் பிரச்சினையைப் பொறுத்தவரையில், கட்சிச் சார்பில்லாமல் நாம் அதை அணுக வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறேன். நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது பேசியிருக்கிறேன். அப்போழுது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபொழுது சொல்லியிருக்கிறேன். தி.மு.க. அரசு காவிரிப் பிரச்சினையில் எந்த நிலையை எடுத்ததோ, அதே நிலையைத்தான் அ.தி.மு.க.வும் எடுத்து இருக்கிறது. எனவே, அதைப் பாராட்டுகிறோம் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். எனவே, தவறான வாதங்களை வைக்கக் கூடாது. 1974-வது ஆண்டு காவிரி ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்ற ஒரு தவறான கருத்தை நாமே ஏற்றுக்கொள்ள முடியாது. அது கர்நாடக மாநிலத்தினுடைய வாதம். அதற்கு நாம் துணைபோகக் கூடாது. காலாவதி ஆகவில்லை. சர்ப்ளஸ் வாட்டரை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்றுதான் 1974-ஆம் ஆண்டு தீர்க்க வேண்டுமென்று 1924-வது ஆண்டு ஒப்பந்தம். அதற்கு மாறான கருத்துக்களைக் கூறுவது தமிழ்நாட்டுக்கு நாமே நம்மை அறியாமல் ஒரு தேவையற்ற ஆபத்தை உருவாக்குவதாக ஆகிவிடும்
திரு. பி. என். வல்லரசு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நமது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர்