பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பிரித்து, தனியாக வளர்த்து, அவற்றின் விதைகளைப் பக்குவப்படுத்தி மறுபடி புதிய செடி வளரச் செய்து அரும்பாடு படுகிறேன். ஆகார வகைகளுக்குத் தக்கபடி மனித குணங்கள், உருவ அமைப்பு முதலியன மாறுகின்றன. உரம், கொடுக்கப்படுகிற போஷாக்குச் சக்திகளுக்கு ஏற்பத் தானே செடிகள் பலன் தரும்? செயற்கை முறைகளினால் தாவர வர்க்கங்களில் எவ்வளவோ அற்புதங்கள் சாதிக்க வில்லையா ஆராய்ச்சியாளர்கள்? பவானி, நீ என்ன நினைக்கிறாய் ?அழகிகளின் ரத்தத்தை ஊற்றியே வளர்த்தால், ஒரு செடியின் பூ தனித் தன்மை பெறாதா ? ரத்தச் செந்நிறமும், மோவைத் தோற்றமும், அழகிகளின் காந்த சக்தியும் பெற்று விடுமல்லவா அச் செடியின் புஷ்பம்? ...' இரவின் ஆழம் போன்ற அந்தவிடம், இருளின் வலிமையைக் காட்ட உதவிய விளக்குகள் நிறைந்த அறை, அந்த மனிதர். அவர் கண்களில் சுடரிட்ட ஒளி, அவரது சிரிப்பு, ரத்தக் கட்டிகள் போல் முன்னாலிருந்த பூக்கள் எல்லாம் சேர்த்து எனக்கு ஒரே காபுராவை உண்டாக்கின. "ஐயோ, நான் வீட்டுக்கு போகணுமே! அம்மா, அடி அம்மா ! என்று கத்தினேன். ‘என்ன பெண் நீ, பவானி! ஏணிப்படிப் பச்சைக் குழந்தை மாதிரி அலறியடிக்கிறாய்? இதோ நானே உன்னைக் கொண்டு போய் விடுகிறேன். முதலில் இதைச் சாப்பிடு. உடம்புக்கு நல்லது. உள்ளத்திற்கும் இதமாக இருக்கும்’ என்று சொல்லி ஒரு வகை குளிர் பானம் கொடுத்தார். வாசனை எல்லாம் கலந்து இனிய பாதாம்கீர் மாதிரியிருந்தது. நான் அவரை நம்பினேன். அதனால் அவர்மீது எனக்குச் சந்தேகமே ஏற்படவில்லை. அதை முழுதும் குடித்துவிட்டேன். அப்புறம் எனக்கு எதுவுமே தெரியாது. எனக்கு பிரக்ஞையே இல்லை. எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்வு விழிப்பு ஏற்பட்டபோது நான் இந்த வீட்டில் இருப்பது தெரிந்தது. அப்பா அம்மா எல்லோரும் நிற்பதை அறிந்தேன். ஒரே