உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

31

இரண்டு கிலோ அரிசிதான் தரப்படுகிறது 15 நாளைக்கு; மாதத்திற்கு நான்கு கிலோ அரிசிதான் தரப்படுகிறது என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை.

தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கின்ற உணவுப் பிரச்சினையைப் போல, மின்சார வெட்டுப்பிரச்சினை. இதன் காரணமாக எந்த அளவிற்கு இந்த மாநிலம் பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதை நான் மீண்டும் மீண்டும் இங்கே விரிவாக எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன். மழை பெய்யவில்லை. எனவே புனல் மின்சாரம் இல்லை என்று காரணம் காட்டப்பட்டாலும், புனல் மின்சாரம் இல்லாவிட்டால் என்ன, அனல் மின்சாரத்தையாவது நீங்கள் அக்கறைகாட்டி அதைப் பெருக்கி வசதிகளைத் தந்தீர்களா என்றால் இல்லை என்ற பதில்தான் இன்றைக்கு எங்களுக்குக் கிடைக்கிறது.

(

நான் கேள்விப்படுகிறேன். அது ஒரு வேளை தவறாக இருக்குமேயானால் பிறகு மின்துறை அமைச்சரவர்கள் நிதியமைச்சரிடத்தில் சொல்லி திருத்தம் கூடத்தரலாம். நான் கேள்விப்பட்டவரையில், மத்திய அரசு, "கோல் இந்தியா லிமிடெட்" வாயிலாக தூத்துக்குடி,எண்ணூர் மின் நிலையங் களுக்கு 1,80,000 டன் மாதந்தோறும் நிலக்கரி ஒதுக்கீடு” செய்திருப்பதாகவும், இதில் 80,000 டன் கூட நாம் எடுத்து வருவதாகத் தெரியவில்லை என்றும் எனக்குத் தகவல்.

கல்கத்தாவில் “கரன் சந்த் தாப்பா" என்ற ஒரு கம்பெனிக்குதான் இந்தக் கான்ட்ராக்ட் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதிலே பலர் டென்டர் கேட்டும்கூட, குறிப்பாக கல்கத்தாவிலே “கரன் சந்த் தாப்பாவுக்கு" ஐந்தாண்டு காலமாக அவரே கான்ட்ராக்ட் எடுக்கின்ற சூழ்நிலை உருவாகி யிருக்கிறது.

அந்தக் கம்பெனி வேறு பல மின்சார வாரியங்களுக்கு, டெல்லியிலே உள்ள மின்சார வாரியங்களுக்கு எல்லாம் இந்த நிலக்கரியை சப்ளை செய்ய வேண்டியிருப்பதால் நம்முடைய தேவையை நிறைவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் நான் கேள்விப்படுகிறேன். இப்பொழுது மறுபடியும் டெண்டர் போட்டபொழுது ஐந்தாண்டுகளுக்குப்