கலைஞரின் சட்டமன்ற உரைகள்
ெ
81
கவர்வதற்குச் செய்யப்படும் ஆக்கபூர்வமான முயற்சி இன்னும் ஒரு தரத்தை எட்டவில்லை. இந்தத் தொழில்களைப் பரவலாக்கும் நோக்கத்தோடு மாவட்டத் தொழில் வளர்ச்சி மையங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், கிராமங்களில் தொழில்கள் வளருகின்ற அளவுக்கு இந்த மையங்கள் வேகமாகப் பணியாற்றவில்லை. இந்த மாவட்ட மையங்களை மேற்பார்வையிட 1978ஆம் ஆண்டு மாநில அளவில் அமைக்கப்பட்ட குழு 1982, அக்டோபர் மாதம் வரை ஒரு முறைகூட கூடவில்லை என்பதை விமர்சகர்கள் உறுதியாகக் காட்டுகிறார்கள். இம்மாநிலம் திறமையானவர்களைக் கொண்டிருந்தபோதிலும், முக்கியமாக எது தேவைப்படுகிறது என்றால், நன்கு ஆராய்ந்து எடுக்கப்படும் திட்டமும் நன்மைகளைச் செய்ய வேண்டுமென்ற உறுதியும்தான் என்று 25.1.1984 'இந்து' பத்திரிகைத் தலையங்கத்திலே குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. நிதியமைச்சர் துண்டு விழுகிற நிலையைச் சமாளிக்க, வருமானத்தைப் பெருக்க சில வரிகளை விதித்திருக்கிறார்கள். நான் அதைப்பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் வருமானத்தைப் பெருக்குவதற்கு வேறு பல வழிகளு வழிகளும் இருக்கின்றன என்பதை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
வ
இந்த நிதிநிலை அறிக்கையில் சாராயத்தின் மீதுள்ள ஆயத்தீர்வையை பல்க் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 4-லிருந்து ரூபாய் 6 ஆகவும், விற்பனை வரியை 6 சதவிகிதத்தி லிருந்து 25 சதவிகிதம் ஆகவும் உயர்த்தியிருக்கிறார்கள் இப்படி வரியை உயர்த்தியிருப்பது அரசாங்கத்தினுடைய வருமானத்தைப் பெருக்குவதற்காக என்று குறிப்பிடப்பட்டிருக் கின்றது. “அரசாங்கத்தினுடைய வருவாயைப் பெருக்க வழி சொல்ல வேண்டியது எதிர்க்கட்சிகளுடைய கடமை. குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் அவைகள் நியாயமாகவும் உண்மையாகவும், ஏற்றுக் கொள்ளத்தக்கவையாகவும் இருக்க வேண்டும்' என்ற கருத்தை டாக்டர் நாவலர் அவர்கள் பேரவையில் பதில் சொல்லும்போது வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நான் ஏற்கனவே பலமுறை சொன்ன
4 - க.ச.உ (நிஅ) ப-2