உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

93

முதல்வர் சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் நாளைக்குக் கூட சென்னையில், மயிலையில் நானும் கலைஞரும் பேசுகிறோம். மாநில சுயாட்சிப் பிரச்சாரம்தான். ஒன்றை மறந்துவிட வேண்டாம். இந்த விஷயத்தில் நாம் போதிய அளவு பிரச்சாரம் செய்திருக்கிறோம். ஆக நாம் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதானது அது நம்மையே பலவீனப்படுத்திவிடும் என்பதை நாம் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் தாமதிக்க அவசியம் இல்லை, தேவையில்லை என்று எண்ணுகிறேன்” என்று அன்றைக்கு நம்முடைய அவைத் தலைவர், மாண்புமிகு சிலம்புச் செல்வர் துணைத்தலைவராக இருந்து வீர முழக்கமிட்டார்கள். இன்னும் சொன்னார்கள். யாரோ சொன்னார்களாம் ம.பொ.சி.கொள்கையை கலைஞர் எடுத்துக் கொண்டார் என்று. ஆணவம் இல்லாமல் மட்டுமல்ல, அடக்கத்தால் மட்டுமல்ல, சத்தியமாகச் சொல்கிறேன், இந்தத் தத்துவம் எனக்குச் சொந்தமல்ல. அகில உலகின் அரசியல் சாஸ்திரம், சரித்திரம் இது. 1781ல் அமெரிக்காவில் தோன்றிய சமஷ்டி சகாப்தம் பின்னால் விரிவடைந்து வருகிறது. நாடு நாடாக பவனி வருகிறது. அதற்காக ஒரு இயக்கத்தைத் துவங்கியவன் என்ற சிறப்பு எனக்கு இருக்கலாமேயொழிய, தத்துவமே எனக்கு ஏகபோகமல்ல. கலைஞர் என் கையில் இல்லை. நான் கலைஞர் கையில் இருக்கிறேன். நான் கலைஞரை வேண்டுகிறேன். அவரது ஆட்சியை வேண்டுகிறேன். இந்தப் பிரச்சினையில் எப்படி வேண்டுமானாலும் என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்கோ கிடந்த எளியவனான என்னை அழைத்து வந்து செக்ரட்டேரியட்டில் ஓர் ரூம் எனக்குக் கொடுத்து இங்கு வைத்திருக்கிறீர்கள். உங்களை வேண்டுகிறேன், நான் இப்படி நெடுநாள் அறைக்குள்ளே அடைபட்டுக் கிடக்க விரும்ப வில்லை. இந்த அறையை விட்டு இந்த மாநில சுயாட்சிக்காக சிறைபுகவே விரும்புகிறேன். உங்களுடைய ராஜ்யத்தின் சிறைச்சாலைகளில் எனக்கும் என் தோழர்களுக்கும் இடம் பார்த்து வையுங்கள். அந்தச் சிறைச்சாலைகளைத் திறந்து வையுங்கள், இன்னொரு முறை இந்த ஏழைத் தொண்டன் நோயாளியாகி சிறையில் அடைபட்டு அங்கு

உயிர்