92
அ
நிதிநிலை அறிக்கை மீது
அது பிரிவினை என்கின்ற வாதத்தைக் கிளப்புகிறது என்றும் சொன்னார்கள். அப்போது மாண்புமிகு நாவலர் அவர்கள் எழுதிய கட்டுரைகளை எல்லாம் நான் எடுத்துப் படித்தேன். மாநில சுயாட்சி கேட்பது பிரிவினை வாதம் ஆகிவிடாது என்ற தன்னாட்சிக்கும் தனி ஆட்சிக்கும் உள்ள அந்த வேறுபாட்டை, முரண்பாட்டை மாண்புமிகு நாவலர் அவர்கள் தனக்கே உரிய தனித்தமிழில் விளக்கியவைகளை எல்லாம் எடுத்து அந்த அவையில் படித்திருக்கிறேன். இந்த அவையிலே அதுபற்றி விவாதம் வந்தபோது கூட, நம்முடைய அவைத் தலைவர், மாண்புமிகு சிலம்புச் செல்வர் அவர்கள் ஒரு தேசியவாதி என்கிற முறையில், இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்ட தளபதிகளிலே ஒருவர் என்கிற முறையில், இங்கே எதிர்ப்புக் குரல் அப்போது கிளப்பப்பட்ட போது, இங்குள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் திரு. ராஜாராம் நாயுடு போன்றவர்கள், மற்றவர்கள் எல்லாம் அதைக் குறித்து எதிர்ப்பாகப் பேசும்போது, "இது பிரிவினையில் கொண்டுபோய் விட்டு விடாதா?” என்று பேசியபோது, நம்முடைய அவைத்தலைவர், மாண்புமிகு சிலம்புச் செல்வர் அவர்கள் “நானே இந்திய நாட்டினுடைய விடுதலைக்காக போரிட்டவன், ஒரு தேசியவாதி. நான் சொல்கிறேன், இது பிரிவினை வாதம் அல்ல. இது 1937-38ஆம் ஆண்டிலிருந்தே சொல்லப்பட்டு வருகின்ற ஒரு கோரிக்கை, எனவே இது பிரிவினை வாதிகளால் சொல்லப்படுகின்ற வாதம் என்று கூறுவது தவறு' என்று குறிப்பிட்டு விட்டு மேலும் ஒன்றை அவர்கள் சொன்னார்கள். எங்களுக்கே அப்போது ஓர் அறைகூவல் விடுத்தார்கள். “நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு என்ன செய்யப்போகிறது? அது எனக்குத் தெரிய வேண்டும். தீர்மானம் பேரவையிலே நிறைவேற்றப்பட்டு விட்டது இங்கும் நிறைவேற்றப் போகிறோம். அதற்கு அப்புறம் என்ன நிலைமை? கொள்கை ரீதியிலே மத்தியில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பிரச்சாரம் வேண்டுமென்று
து