96
நிதிநிலை அறிக்கை மீது
அதிகாரிகளாலும், ஒப்பந்தக்காரர்களாலும் ஏமாற்றப்படு கிறார்கள், விரட்டியடிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து இரண்டு வாரம் கட்டுரை எழுதினார்கள். ஜூனியர் விகடன் ஒரு கட்சி சார்புடைய ஏடல்ல. உங்களுக்குத் தெரியும். அது திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விமர்சிக்கும்,
அ.தி.மு.க.வையும் விமர்சிக்கும். மற்ற கட்சிகளையும் விமர்சிக்கும். அதே நேரத்தில் நாட்டிலே நிலவுகின்ற குறைபாடுகளை ஆராய்ந்து எடுத்துச் சொல்கிற ஏடாக இருக்கிறது அது. என்னைக்கூட சில சமயங்களில் விமர்சித்து பல நேரங்களில் தாக்கி அதிலே எழுதப்பட்டிருக்கிறது. இருந்தாலும் சில உண்மைகள் அந்த ஏட்டில் வெளிவருகின்ற நேரத்தில், அரசு அதைக் கவனிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். அங்கே ஸ்ரீலங்கா அகதிகளாக இருப்பவர்களின் நிலைமைகளை அந்தப் பத்திரிகை கட்டுரை எழுதியும், புகைப்படங்கள் எடுத்தும் வெளியாக்கியிருப்பதை நாவலர் அவர்களின் பார்வைக்குத் தருகிறேன். அவர் களுக்காக கட்டித்தரப்பட்ட வீடுகள், ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டப்பட்ட மறுநாளே இடிந்து விழுந்து, பச்சைக் கற்களாகக் காட்சியளிக்கின்றன. அப்படி இடிந்த வீடுகளில் இருந்த அவர்களது கார்டுகள், அந்த ஒப்பந்தக்காரர்களால் ஏமாற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட சம்பங்களும் அங்கே நடந்திருக்கின்றன. மத்திய அரசு தருவதாக வாக்களித்துள்ள கடனை நம்பி, தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி வருகிற கடன்கள், இடையிலே இருக்கிற அரசாங்க அதிகாரிகளாலும், அவர்களுடன் ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கிற காண்ட்ராக்டர்களாலும் பிடுங்கப்பட்டு, அந்த அகதிகள் இன்றைக்கு ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதுக் கோட்டை மாவட்டத்திலும் நீலகிரி மாவட்டத்திலும் அவர்கள் படும் பாட்டை அந்த ஏடு விளக்கமாகக் காட்டியிருக்கிறது. அதைப் படிக்க வேண்டும் முன்னாலேயே அதைப் படித்திருந்தால், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீலங்காவிலிருந்து
இ
ய
துரத்தப்பட்டு, பரிதாபமாக இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு வரும் அகதிகளை மேலும் இங்கே அவமானப்படுத்துவது ஏமாற்றுவது, தமிழகமும் இப்படித்