கலைஞரின் சட்டமன்ற உரைகள்
97
தானா என்று அந்த அகதிகள் எண்ணிவிடக்கூடாது என்பதை அரசின் கவனத்திற்கு நான் கொண்டு வர விரும்புகிறேன். ஸ்ரீலங்கா தமிழர்கள் பிரச்சினையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை என்ன என்பதை இங்கே பேசிய உறுப்பினர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். அருமை நண்பர் திரு. பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்களும் சட்டமன்றக் கட்சித் துணைத்தலைவராக இருக்கிற அருமை நண்பர் திரு. சாதிக் பாட்சா அவர்களும் மற்றவர்களும் இது குறித்து விளக்கியிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா பிரச்சினையைப் பொறுத்த வரையில், நம் கழகத்தை பொறுத்தவரையில், ஒரு போராட்டத்தை நடத்துவது என்ற ஒரு முடிவை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அந்தப் போராட்டம் நடத்தத் தேவையில்லையென்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் கூறவில்லை என்பதையும் நாவலர் அவர்கள் இங்கே நேற்றைய தினம் எடுத்து விளக்கியிருக்கிறார்கள்.
அ
சர்வகட்சிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த சர்வகட்சிக் கூட்டத்திற்கு மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் கருணாநிதி ஏன் போகவில்லை என்று நம்முடைய அவையினுடைய மாண்புமிகு துணைத்தலைவர் அவர்கள் இங்கே ஒரு பிரச்சினையை எழுப்பினார்கள். எழுப்பியது மாத்திரம் அல்ல, கடந்த காலத்திலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்ற சர்வகட்சி கூட்டங்கள் பற்றியெல்லாம் கூட அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அவைகளையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிற நம்முடைய அருமை நண்பர் மாண்புமிகு திரு. சுவாமிநாதன் அவர்கள் அந்த சர்வகட்சிக் கூட்டம் ஒன்றுக்கும் அன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையில், அ.தி.மு.க.வினுடைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த என்னுடைய அருமை நண்பர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் வரவில்லை என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. "அவர் வரவில்லை என்பதற்காக நீங்கள் வராமல் இருந்துவிட்டீர்களா?' என்று கேட்டால், அவர்கள் வரவில்லை. ஆகவே வராமல் இருந்துவிட்டேன்” என்று அல்ல. பிரச்சினைதான் எங்களுக்கு முக்கியம் ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சினைக்காக 1983ஆம் ஆண்டு நடந்த இரண்டொரு கூட்டங்களில் நான் கலந்துகொண்டு