உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

நிதிநிலை அறிக்கை மீது

கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கின்றேன். ஒருமுறை நான் கூறிய கருத்துக்களை ஏற்காத காரணத்தால், நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தில், எங்கள் கட்சியின் சார்பிலே வெளிநடப்பு கூட செய்திருக்கின்றோம். எனவே நாங்கள் கலந்து கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால், நான் கழகம் நடத்துகின்ற போராட்டத்திற்காக கடந்த மாதம் 31 ஆம் தேதி இந்த மாதம் முடிய என்னுடைய சுற்றுப்பயணத் தேதிகளை வெளியிட்டு 4,5 ஆம் நாட்களிலும் 6ஆவது நாளிலும் பிறகு 8,9, 10ஆம் நாட்களிலும் சென்னையிலே இருப்பதாகவும், மற்ற நாட்களில் வெளியூர் போவதாகவும் சுற்றுப்பயண நாட்கள் செய்தித் தாளில் வந்திருக்கிறது. இருந்தாலும்கூட நான் 2ஆம் தேதி எங்கிருக்கிறேன் என்று பார்த்து அந்தக் கூட்டத்தைக் கூட்டியிருப்பதுபோல இருக்கிறது. 2ஆம் தேதி கூட்டம் என்று 31ஆம் தேதி எனக்கு அறிவிப்பு கிடைத்தது.

எங்களுடைய

கட்சியைப்

பொறுத்தவரையில், அவரவர்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துக்கள் இல்லை ஒருமுகமாக எங்கள் செயற்குழுவிலும், பொதுக் குழுவிலும் எடுக்கப்படும் கருத்துக்களைத்தான் நாங்கள் சர்வகட்சிக் கூட்டத்திலே எதிரொலிப்போம் என்கிற வகையில் முதல்நாள் கூட்டத்திற்கு மாண்புமிகு உறுப்பினர் திரு. சாதிக் பாட்சா அவர்களும், திரு. டி.ஆர்.பாலு அவர்களும், மறுநாள் கூட்டத்திற்கு எங்கள் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திரு. கந்தப்பன் அவர்களும், திரு. டி.ஆர்.பாலு அவர்களும் சென்று கழகத்தினுடைய கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். 1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்தப் பிரச்சினை தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. இன்னமும் பிரதமர் திரு. இராஜீவ் காந்தியைச் சந்தித்து மனுக்கொடுப்பது என்ற நிலையே இருந்தால்

அது

போதுமானதா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். நாம் 1983ஆம் ஆண்டில் கொடுத்த மகஜருக்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? "இலங்கையிலுள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு உறுதியை ஏற்படுத்தவும். நிர்வாகத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தவும், ஐ.நா.சபை