உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

99

உலகம் முழுவதுமிருந்து பார்வையாளர்களைக் கொண்ட குழு ஒன்றை உடனடியாக நியமிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பிரச்சினை ஐ.நா.சபையில் உடனடியாக எழுப்பப்பட வேண்டும். இலங்கை அரசும், இராணுவமும் கட்டவிழ்த்து விட்டிருக்கிற படுகொலைகளுக்கு ஒருமுற்றுப்புள்ளி வைக்க, ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலில் உடனடியாக இந்தப் பிரச்சினை எழுப்பப்படவேண்டும். இலங்கைக்கு ஐ.நா சபையின் படைகளை அனுப்புவதன் மூலம் மாத்திரமே இதனைத் தடுத்து நிறுத்த முடியும். அதே சமயத்தில் இலங்கையில் நடைபெறுகின்ற இனப்படுகொலையை நிறுத்த, கூட்டு சேரா நாடுகளின் ஒத்துழைப்பையும் பெற்றிட வேண்டும். காமன்வெல்த் நாடுகளுக்கிடையே இதற்கான தீர்வைக் கேட்டிட வேண்டும். உயர்மட்ட, உலக அளவிலான தூதுக்குழு ஒன்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர், இந்தியப் பாதுகாப்புப் படை அமைச்சர், தமிழகத்திலிருந்தும் சில பிரதிநிதிகள் கொண்ட தூதுக்குழு ஒன்று எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில், இலங்கைக்கு அனுப்பப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். பங்களாதேஷ் மக்கள் பாதிப்புக்கு ஆளான நேரத்திலும், பாலஸ்தீனிய அகதிகள் பிரச்சினையிலும் உலக முழுவதும் எடுக்கப்படும் அதே வழிமுறைகளை எல்லாம், மேலும் தாமதம் ஆவதற்கு முன்பு இந்தக் குழு நன்கு தெரிந்து வைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவர்கள்

இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களை சிங்கள குடியுரிமை பெற்றவர்களானாலும், இந்தியர்க ளானாலும், நாடற்றவர்களானாலும் அவர்கள் துயரங்களைத் துடைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நம்முடைய கோரிக்கைகளை எல்லாம் அந்த முறையீட்டிலே வைத்து பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களிடத்திலே 1983ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 31ஆம் நாள் கொடுக்கப்பட்டது.

திரு. ஜி. சுவாமிநாதன் : இடையிலே பேசுவதற்கு மன்னிக்க வேண்டும். காவிரி நீர் பிரச்சினையிலே 1972ஆம் ஆண்டிலே தீர்மானம் போடப்பட்டு, அதற்கு சர்வ கட்சிக்