உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

நிதிநிலை அறிக்கை மீது

கூட்டம் போடப்பட்டு மத்திய அரசிடம் மனு கொடுக்கப் பட்டது. ஆனால் மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கே நினைத்த மாதிரி செய்யவில்லை என்ற கருத்திலே சொல்லப்பட்டாலும் கூட, தொடர்ந்து மத்திய அரசாங்கத்தோடு பேசிக் கொண்டிருந்தார்களே தவிர, மத்திய அரசோடு பேச வேண்டாம், எந்தவிதமான ஒப்பந்தமும் இல்லை என்று ஒதுக்கி வைத்துவிடவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிரச்சினையிலே நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே மனு கொடுத்தோம். அந்த மனுவின்மீது மத்திய அரசும் செவி சாய்க்கவில்லை ஆகவே மத்திய அரசாங்கத்தோடு பேசுவதில் பயன் இல்லை என்று இந்த அரசை மட்டும் உறுப்பினர் குறை சொல்வது எப்படி நியாயமாக இருக்கும் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி : மன்னிக்க வேண்டும். நான் இந்த அரசைக் குறை கூறவே இல்லை. இங்கே மாத்திரம் அல்ல, நான் பேசுகின்ற போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் இந்த அரசைக் குறை கூறி ஒரு வார்த்தை

கூட

சொல்லவில்லை. இந்த அரசு தன்னால் இயன்ற அளவுக்குத் தன்னுடைய கடமையைச் செய்து வருகிறது என்றுதான் நான் திட்டவட்டமாகச் சொல்கின்றேன். மத்திய அரசை நான் கண்டிக்கிற நேரத்தில் கூட மத்திய அரசை வலியுறுத்துவதற்காக இந்தப் போராட்டமே தவிர மத்திய அரசை எதிர்த்து இந்தப் போராட்டம் என்று நான் சொல்லவில்லை. மத்திய அரசை வலியுறுத்துவதற்காகத்தான் என்று சொல்கின்றோம். காவிரிப் பிரச்சினையிலே கூட தமிழக அரசு அன்றைக்கு இப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கையாளுகிற நேரத்தில், பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதைப் போலத் தான் அரசு தன்னுடைய கடமையைச் செய்கிறது. அதோடு சேர்ந்து எங்களுடைய கடமையை நாங்கள் செய்கிறோம். அப்போது விவசாயிகள் போராட்டம் நடத்தியதைப் போல நாங்களும் போராட்டம் நடத்துகிறோம். அவ்வளவுதான். வேறல்ல. ஆனால் காவிரிப் பிரச்சினையோடு ஸ்ரீலங்காவிலே தினமும் செத்துக் கொண்டிருக்கிற தமிழர்களுடைய

6