உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

129

கண்டித்தும்கூட அதையெல்லாம் மீறி பெரும்பான்மை காரணமாக அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி அதற்குப் பிறகு தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்க மதுக் கடைகளை மீண்டும் திறக்கிறேன் என்று சொல்லித் திறந்ததும், இந்த முதலமைச்சர்தான் இப்படி மதுக்கடைகளை மூடுவதற்கும், தாய்மார்களின் கண்ணீர். மீண்டும் திறப்பதற்கும், தாய்மார்களின் கண்ணீர். திரும்பவும் மூடுவதற்கும் தாய்மார்களின் கண்ணீர் என்று மாறி மாறிச் சொல்லும் சூழ்நிலை 1979ஆம் ஆண்டுமுதல் வாக்குறுதியாகத் தரப்பட்ட காரணத்தால்தான், இந்த வாக்குறுதியாவது காப்பாற்றப்படுமா என்ற ஐயப்பாடு எனக்கு எழுகிறதே தவிர வேறல்ல.

தொழில் வளர்ச்சியில் நம்முடைய மாநிலம் மிகவும் முன்னேற்றம் அடைத்திருப்பதாக குறிப்புகளைக் காட்டியிருக் கிறார்கள். மத்திய அரசு நம்முடைய மாநில தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பெரும் திட்டங்களை அளிக்க வில்லை என்ற குறைபாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். குறிப்பாக சேதுசமுத்திரத் திட்டம் எத்தனையோ ஆண்டுகளாக அவ்வப்போது இருக்கின்ற தமிழக அரசாங்கங்களால் தமிழ்நாட்டின் சார்பாக சென்றிருக்கின்ற தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்களானாலும் சரி. அ.தி.மு.க. உறுப்பினர்களானாலும் சரி, வேறு கட்சி உறுப்பினர்களானாலும் சரி, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களானாலும் சரி, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் களானாலும் சரி, அவர்கள் அத்தனை பேரும் பாராளு மன்றத்திலே வலியுறுத்தி, நினைவூட்டத் தவறவில்லை. அதைப் போலவே திண்டுக்கல் - கரூர் அகல இருப்புப்பாதை. இந்த இரண்டு திட்டங்களையும் மாநில அரசு பலமுறை கோரியும், மாநில அரசின் சார்பாக பல்வேறு கட்சிகள், எதிர்க் கட்சியாக இருந்தாலும்கூட எங்களைப் போன்ற கட்சிகள் வாதாடியும் கூட, பிரதமரிடம் விண்ணப்பம் தந்தும்கூட இந்த இரண்டு பெரிய திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய சர்க்கார் முன்வரவில்லை, அதற்காக முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பது எங்களுக்குள்ள மாபெரும் குறைபாடு. நாங்கள் அதைக் கண்டித்திருக்கிறோம், எதிர்த்திருக்கிறோம், அதுபற்றி பலமுறை பேசியிருக்கிறோம். ஆனாலும் கூட மத்திய அரசு