கலைஞரின் சட்டமன்ற உரைகள்
153
ல
இன்றைக்கு இந்தியா முழுவதிலும் இந்தக் கொள்கை பரவியிருக்கிறது. அதே நேரத்தில் மாநில அரசுகள் இன்றுள்ள சூழ்நிலையில் மத்திய அரசு நிர்வாகத்தின்கீழ் இயங்க வேண்டிய இந்த நிலையில், நிர்வாக மோதல்களை, தேவையற்ற அளவிற்கு உருவாக்கிக் கொள்ளாமல், மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தாலும்கூட, நிர்வாகத்தில் மோதல் ஏற்படக் கூடாது. உறவிற்கு கை கொடுப்போம் - நிர்வாகத்தில்; அதே நேரத்தில் நம்முடைய உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம் என்ற அந்த மொழிக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டுமென்ற அடிப்படையில்தான் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி, அன்றும் சரி, இன்றும் சரி, தன்னுடைய கொள்கைகளை வகுத்துக் கொண்டு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது
இங்கே படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையானாலும், இன்றைக்கு விவாதிக்கப்பட்டு நிறைவுற்ற நிலையில் பதிலளிக்கப்படுகிற இந்தச் சூழ்நிலையானாலும் சரி, அரசியல் சட்டத்தின் பாற்பட்டு, நடைபெறுகிற செயல்களே தவிர, விரோதமான செயல்கள் அல்ல. கவர்னர் அவர்கள் கடந்த 25ஆம் தேதியன்று நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்திலே வைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறார்கள், ஆணையிடு கிறார்கள். அதற்கேற்ப, அரசியல் சட்டத்தினுடைய அடிப்படையிலேதான் கவர்னர் குறிப்பிட்ட அந்த நாளில் நிதிநிலை அறிக்கை இங்கே படிப்பதற்கு நாங்கள் முன் வருகிறோம். நிதிநிலை அறிக்கை படிக்கப்படுகிற நேரத்திலே ஒரு குழப்பம் ஏற்படுத்தி, அந்த நிதிநிலை அறிக்கை வழங்கப்படும்போது அவைகள் கிழித்தெறியப்பட்டும், சுக்குநூறாக ஆக்கப்பட்டும் ஒரு அமளியை உருவாக்கிவிட்டு, பிறகு நிதிநிலை அறிக்கையை நான் படிக்கத் தொடங்கியபோது, ஏற்கெனவே நிதிநிலை அறிக்கை வெளியாகிவிட்டது என்று எடுத்துச் சொல்லி, எனவே நிதியமைச்சர் ராஜினாமாச் செய்யவேண்டும் என்று கூறக்கூடிய வாய்ப்புகூட உண்டு. அதனால்தான் நிதி நிலை அறிக்கை படிக்கிற நாளில், அந்த அலுவலைத் தவிர, வேறு அலுவல் இருக்கக்கூடாது என்று ஏற்கெனவே இருந்த சபாநாயகர்கள் முடிவு எடுத்து, அரசியல் சட்டத்தின்