156
நிதிநிலை அறிக்கை மீது
கோடி. இந்தச் சூழலிலே சென்ற ஆண்டுத் திட்டம் 1,202 கோடி ரூபாய் என்று இருந்ததை, நாம் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு டெல்லி சென்று திட்டக் குழுவோடு விவாதித்து 1,202 கோடி ரூபாய் என்று வகுக்கப்பட்டிருப்பதை, அதற்கான ஒப்புதலை 1,360 கோடி ரூபாய் என்கிற அளவிற்கு இந்தத் திட்டத்தை அதிகப்படுத்திய பெருமை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு உண்டு. (மேசையைத் தட்டும் ஒலி).
எனவே நாம் இங்கே 5,100 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகையைக் கொண்ட ஒரு பட்ஜெட்டைப் பற்றி விவாதிக்கும்
போது, எவ்வளவு அக்கறையோடு, ஆர்வத்தோடு
உண்மையோடு, மக்களுடைய பிரச்சினைகளை மையமாக வைத்து நடந்துகொள்ள வேண்டும் என்கிற பொறுப்போடு உறுப்பினர்கள் எல்லாம் அமர்ந்திருக்கிறார்கள் என்பதற்காக நான் பூரிப்பு அடைகிறேன். உங்களையெல்லாம் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
எனவே, ஏற்கெனவே தொடங்கிய திட்டங்கள், தொடர வேண்டிய திட்டங்கள், புதுத் திட்டங்கள் ஆகியவற்றிற்காக நாம் செலவிட வேண்டியிருப்பதால் இப்போது துண்டு விழப் போகிற தொகை 65 கோடியும், கவர்னர் ஆட்சியிலே துண்டு விழுகிற தொகை 154 கோடியும் சேர்த்து 219 கோடி ரூபாய் மொத்தமாகத் துண்டு விழுகிற பட்ஜெட்டாக நாம் தரவேண்டி யிருந்தது என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசை நம்பி இந்தத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்ற முடியாது என்று பி.எச். பாண்டியன் அவர்கள் நேற்றைக்குச் சொன்னார்கள். நம்புவது என்பது வேறு. அவர்களைத் தொடர்ந்து வலியுறுத்துவது என்பது வேறு. தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருப்போம் நம்பிக்கையோடு வலியுறுத்திக் கொண்டே இருப்போம். குடியரசுத் தலைவருடைய ஆட்சியில் ஏற்பட்ட பற்றாக் குறையைச் சரிக்கட்ட வேண்டிய பொறுப்பும் உதவ வேண்டிய கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிற காரணத்தால் நம்பிக்கையோடு நாம் வற்புறுத்துவோம் என்பதை மீண்டும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.