உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

175

இணங்கலாம். எனவே அது குறித்து விரைவிலே பரிசீலித்து அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் மின்வாரியத் திற்கு 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமதமாகக் கட்டியதற்கு விதிக்கப்பட்ட அபராத வட்டி அறவே ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை 31.3.1989க்குள் கட்டியிருந்தால் பொருந்தும். தற்போது உறுப்பினர்கள் பலருடைய வேண்டுகோளை ஏற்று இந்தக் காலத்தை நீட்டித்துத்தர இதனை ஏற்று 30.09.1989 வரைக்கும்; நிலுவையில் உள்ள தொகையை முழுமையாக கட்டினாலே அபராத வட்டி அறவே ரத்து செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்துணவுக் கூடங்கள் மூலம் கோழிமுட்டை தருவதாகவும் 15 நாட்களுக்கு ஒருமுறை கோழிமுட்டை தருவதாகவும், பிறகு கோழிகளை வளர்ப்பதன் மூலமாக வாரத்திற்கு ஒருமுறை கோழி முட்டை தருவதாகவும் சொல்லி யிருந்தேன். இப்போது அந்தத் திட்டம் 'எம்.ஜி.ஆர். திட்டம், எம்.ஜி.ஆர். திட்டம்' என்று சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் காமராசர் கொண்டு வந்த திட்டம்தான் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலே விரிவாக்கப்பட்ட திட்டம். இன்னும் சொல்லப்போனால், ஜஸ்டிஸ் ஆட்சி காலத்திலே சர்.பி. தியாகராஜ செட்டியார் அவர்கள் கொண்டு வந்த திட்டம் மதிய உணவுத் திட்டம். பிறகு காமராசர் அவர்களாலே விரிவாக்கப்பட்டு, பிறகு எம்.ஜி.ஆர். காலத்திலே விரிவாக்கப்பட்டு இப்போது நம்மால் மேலும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்த கோழி முட்டைகளைத் தருகின்ற வகையில் அதற்கு ஒரு அடையாளபூர்வ சலுகை யாக கோழித் தீவனம் மீது விதிக்கப்பட்டிருக்கின்ற 2 சதவிகிதம் விற்பனை வரி ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே பேசிய நம்முடைய அன்பில் பொய்யாமொழி என்று கருதுகிறேன், அவரும் மற்றும் வேறு சில உறுப்பினர்களும், மாணவர்களுக்கு பேனாவுக்கு, பென்சிலுக்கு எல்லாம் வரி விலக்கு அளித்திருக்கிறீர்கள். ஆனால் இங்கிற்கு அளிக்கக் கூடாதா

ம்

2