உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

நிதிநிலை அறிக்கை மீது

வேன் உரிமையாளர்கள் வரி விகிதம் சற்று அதிகமாக இருக்கிறது என்று சொல்லி இதனால் தொழில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறதென்றும் குறிப்பாக நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய அருமை நண்பர் திரு பீட்டர் ஆல்போன்ஸ், எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையிலே சிலரும், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் என்னைச் சந்தித்தார்கள். 'மொத்த வரிவிகிதம் 250 என்று இருந்ததை மாற்றி, இருக்கை ஒன்றுக்கு மொத்தமாக ரூ.250 என்று இருந்ததை மாற்றி, இருக்கை ஒன்றுக்கு ரூ. 150 என்று மாற்றுவதால் மொத்தமாக வரி ரூ. 1,800க்கு உயரும்' என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

வேன்கள் ஒட்டக் கூடிய உரிமையாளர்கள் பலர் ஒரே வேனை வைத்துத் தொழில் செய்து கொண்டிருப்பதாலும் மற்றும் உள்ளூர் போக்குவரத்து பாதிக்காத அளவுக்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் 12 இருக்கை என்ற உச்ச வரம்பின் அடிப்படையிலே ரூ. 1,000 என்று ஒட்டு மொத்தமாக வரி விதிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது. அதற்கு அந்த வேன் உரிமையாளர்களும் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

ஓட்டல் வரியைப் பற்றி இங்கு பேசப்பட்டது. ஆண்டு ஒன்றுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் வியாபாரம் நடக்கின்ற ஓட்டல்களுக்கும் உணவு விடுதிகளுக்கும் 5 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருப்பதைச் சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி அதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அறவே அந்த வரியை ரத்து செய்ய முடியாது. ஏனென்று சொன்னால், ஆடம்பர ஓட்டல்களில் ரூம் வாடகையிலிருந்து சாப்பாடு வரையில் அதிகக் கட்டணம் விதித்து வசூலிப்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை எனவே, ரூ. 10 லட்சத்திற்கு மேல் வியாபாரம் நடக்கும் ஓட்டல்கள், உணவு விடுதிகள் வரிவிகிதம் 5 சதவிகிதம் என்பதை மாற்றியமைத்து ஒட்டுமொத்த வரியாக,

கம்பௌண்டிங் முறையில் விதிக்கலாம் என்பதைப் பற்றி அரசு பரிசீலிக்கிறது. இதிலே விருப்பம் இல்லை என்றால் 'ஆப்ஷன் முறையில், 5 சதவிகிதம் கட்டுபவர்கள் கட்டலாம் அல்லது 'கம்பௌண்டிங்' முறையிலே இணங்குகின்றவர்களும்