கலைஞரின் சட்டமன்ற உரைகள்
177
பண்ணைத் தொழில், மரம் ஏறுதல் இதற்கெல்லாம் 10 ரூபாய் என்று இருந்ததை 16 ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம். பண்ணை ஆளுக்கு மாதம் 210 ரூபாயாக இருந்தது இனிமேல் 375 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து, 1985–86ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், அப்போதைய ஆட்சியில் என்னுடைய அருமை நண்பர் கவிஞர் கண்ணதாசன் நினைவாக காரைக்குடியில் ஒரு மணி மண்டபம் அவருக்காகக் கட்டப்படும் என்று அறிவித்தார்கள்
ஆனால் அறிவிப்பு அறிவிப்பாக இருக்கிறது. அண்மையில் நான் தேர்தல் நேரத்தில், நம்முடைய இராம. நாராயணன் அவர்களுக்காக காரைக்குடிக்குச் சென்றபோது என்னிடத்தில் தரப்பட்ட கோரிக்கையை ஏற்று விரைவிலே கண்ணதாசன் நினைவு மண்டபம் காரைக்குடியில் எழுப்பப்படும், என்று சொன்னேன். இந்த ஆண்டிலேயே அது ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து பணி நடைபெற்று, விரைவில் அந்த மண்டபம் என்னுடைய நண்பருக்கு என்னிடம் ஆயிரம் யிரம் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் கூட ஆரம்பத்தில் என்னுடன் பழகிய அந்த நண்பருக்காக, நல்ல கவிஞருக்காக, தமிழ் கவிஞருக்காக அந்த மண்டபம் கட்டப்படும் என்பதையும் இங்கே நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இட ஒதுக்கீடுகள் பற்றி இங்கே பேசப்பட்டது. இன்னும் இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இந்த ஒதுக்கீடு பற்றிப் பேசும்போது வன்னியர்கள் எல்லாம் எங்களுக்கு விரோதிகள் என்று சொன்னார்கள். நேற்றைக்குத் தான் நான் எண்ணிப் பார்த்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்திலே எத்தனை வன்னியர்கள் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்தேன். 24 வன்னியர்கள் தி.மு.க.வில் மட்டும் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள், அதேபோல தோழமை கட்சியிலிருந்து 4 வன்னியர்கள் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள் என்று இங்கே சொல்கிறார்கள். ஆக, அவ்வளவு வன்னியர்கள் இங்கே வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். ஆனால் வன்னியருக்காகப்
7 - க.ச.உ. (நி.அ) ப-2
4