230
நிதிநிலை அறிக்கை மீது
செய்யப்பட்டன. இந்த அரசு மதுவிலக்குக் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்துவதோடு, மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்வதாக இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது. மதுவிலக்குச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம், சமூக விரோதிகள் சிலரின் கைக்குச் செல்லுகின்ற பணத்தை அரசுக்குக் கிடைக்க வழிவகை செய்யமுடியும் என்று இந்த அரசு கருதுகிறது.
அதை ஒட்டித்தான் மதுவிலக்கைத் தளர்த்தி, சட்டம் கொண்டு வரப்பட்டது; விவாதங்கள் நடைபெற்றன. 30.3. 1981ல் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அந்த விவாதத்திற்குப் பதில் அளிக்கும்போது கூறுகின்ற அருமையான வாசகம் "மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்துவதிலே தோல்வி ஏற்பட்டது என்பதுதான் எங்களுடைய எண்ணம். அந்த எண்ணம் ஈடேறவில்லை. யார், யாரோ முயன்றும் அந்த எண்ணம் ஈடேறவில்லை. புத்தர் முயன்று பார்த்தார். முடியவில்லை, மகாவீரர் முயன்று பார்த்தார் முடியவில்லை. வள்ளுவர் முயன்று பார்த்தார், முடியவில்லை. நாயன்மார்கள் முயன்று பார்த்தார்கள், முயன்று பார்த்தார்கள்,
முடியவில்லை.ஆழ்வார்கள்
முடியவில்லை. பட்டினத்தடிகள், இராமலிங்க அடிகள் எல்லாம் முயன்று பார்த்தார்கள். முடியவில்லை. மகாத்மா காந்தியடிகள் முயன்று பார்த்தார்கள், முடியவில்லை. பெரும் தலைவர் காமராஜர் முயன்று பார்த்தார்கள், முடியவில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் முயன்று பார்த்தார்கள், முடியவில்லை. வள்ளுவர் கூட முயன்று பார்த்தார்கள், முடியவில்லை (சிரிப்பு).
'களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்தூரி இயற்று.
அதாவது, குடித்தவனைத் திருத்துவது என்பது எப்படி இருக்கும் என்றால், தண்ணீருக்குள் மறைந்து இருப்பவனை விளக்கு கொண்டு தேடுவது மாதிரி இருக்கும்” என்று சொல்கிறார். எனவே, இது முடியாத காரியம் என்று வள்ளுவரும் சொல்லி விட்டார் என்று நாவலர் அந்த