கலைஞரின் சட்டமன்ற உரைகள்
237
வீட்டிற்குப் பக்கத்திலே, நான்கு ரூபாய் தந்தால், கள்ளச் சாராயம் ஒரு முழு கிளாஸ் அளவுக்குக் கிடைக்கிறது என்பதை காந்தி அறிய நேர்ந்தால், சமாதியின் அடியிலேயே நெளிவார்.
இது மிஸ்ரா, Probe India-விலே எழுதிய கட்டுரையாகும். அதற்காகத்தான் அதை நான் இங்கே படித்துக் காட்டினேன் இன்னொன்று; இது நாடாளுமன்றத்திலே நடைபெற்றது.
குமாரி மணிபென், அண்மையிலே இறந்துவிட்டதாய், அவர்கள் பிரதமர் இந்திரா காந்தியைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள். இந்த மதுவிலக்கு சம்பந்தமாக. அதைக் குறித்து, அன்னை இந்திரா காந்தி அவர்கள், 1976 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திலே பதில் சொல்லும்போது, குறிப்பிடுகிறார்கள்.
"... Kumari Maniban also spoke of people's drinking. Now you know that we are trying to launch movement against alcoholic drinks. But what about the paragen of virtue in this respect in the State of Gujarat? During the Assembly elections, I had heard of liquor being distributed by a tanker. The other day, we all read of deaths in Surat due to imbibing of illicit liquor."
என்ன
“குமாரி மணிபென் பொதுமக்கள் குடிப்பதைப் பற்றி பேசினார். உங்களுக்கு எல்லாம் தெரியும். நாங்கள் குடிப்பழக்கத்திற்கு எதிராக ஒரு இயக்கத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மதுவிலக்குக் கொள்கையிலே, மாதிரி மாநிலம் எனப் பேசப்படும் குஜராத்தில் நிலைமை? சட்டமன்றத் தேர்தல்களின்பொழுது, டேங்கரில் கொண்டு வந்து சாராய விநியோகம் செய்யப்படுவதாக அந்த நேரத்திலே கேள்விப்பட்டேன். சூரத்தில், சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி, பலபேர் மரணம் அடைந்ததை செய்தித்தாள்களிலே படித்தேன்" என்று அவர் சொன்னார். இது 'குமாரி மணிபென்' இங்கே 'குமரி அனந்தன்' (சிரிப்பு) அவர் 28.3.1981ல் இந்த மாமன்றத்திலே ஒன்றைப் பேசினார். மதுவிலக்கைப் பொறுத்தவரையில் நான் உங்களுக்கு சொல்லிக் கொள்வேன்' '... (குறுக்கீடு) ஒரு எழுத்துக்கூட