236
நிதிநிலை அறிக்கை மீது
வாசம். அமைக்க முடியுமா என்பது கேள்விக் குறி. இருந்தாலும், அமைப்பது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. உங்களைப் போல நல்ல இளைஞர்கள், எதிர்காலத்திலே இந்த நாட்டினுடைய நிலையை உயர்த்துவதற்கு, இந்த மக்களை முன்னேற்றுவதற்குப் பயன்படுவார்களேயானால், நான் ஒரு மூத்தவன்; வயதானவன் என்கின்ற முறையில் - என்னுடைய வீட்டாரெல்லாம் வந்திருக்கிறார்கள், இருந்தாலும் (சிரிப்பு) சொல்கிறேன். வயதானவன் என்கிற முறையில் உங்களை எல்லாம் வாழ்த்துவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
திரு.சா. பீட்டர் ஆல்போன்ஸ்: வயதானவர் என்று சொன்னாலும், எங்கள் முதல்வர் அவர்கள் கவர்ச்சிகரமாக இருக்கிறார் என்று சொல்லுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி (சிரிப்பு).
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: நன்றி கூறிக் கொள்கிறேன். என் வீட்டினரை நினைத்து (சிரிப்பு).
அவர் சொன்னார். நான் திரும்பவும் நினைவூட்ட விரும்புகிறேன். அண்மையில் ஏப்ரல் திங்கள், 1989ல் Probe India என்ற பத்திரிகையில், 'மிஸ்ரா' என்ற துணை ஆசிரியர். எழுதுகிறார். அவர் எழுதிய கட்டுரை முழுவதையும் படிக்க நேரம் இல்லை. அதிலே ஒரு பகுதியை மாத்திரம் படித்துக் காட்டுகிறேன். எவ்வளவு உருக்கமான கட்டுரையாக இருக்கிறது அது என்பது உங்களுக்கு அப்போது தெரியும். ஆங்கில வாசகத்தைக் கூட நான் படிக்க விரும்பவில்லை. தமிழ் வாசகத்தை மாத்திரம் படிக்கிறேன், தமிழ் ஆக்கத்தை மாத்திரம். அவர் சொல்கிறார்:
"போர்பந்தரில் மகாத்மா காந்தியின் சொந்த ஊரில், ஒரு கள்ளச் சாராய வியாபாரி, தரைக்கு அடியில் பெட்ரோலைச் சேமிப்பதைப் போல, பெரிய குளம் கட்டி 50 ஆயிரம் லிட்டர் சாராயத்தைத் தேக்கி வைத்திருக்கிறார். பெட்ரோல் பங்க் போலவே, அவரது கடையில் ஒரு கை பம்பு இருக்கிறது. கை பம்பை அடித்தால், பாதாளத்திலிருந்து பாய்ந்து வருகிறது சாராயம். எங்கோ, தொலை தூரத்தில், டெல்லி ராஜ்காட்டில், மகாத்மா காந்தி தனது சமாதியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். தனது பிறந்த