கலைஞரின் சட்டமன்ற உரைகள்
235
ஏலம் கேட்கலாம். ஆக டெண்டர் கேட்பவர்களுக்கே கொடுத்து விடவில்லை. யாருமே ஏலம் கேட்காவிட்டால்தான் 90 ஆயிரம் டெண்டர் கேட்டவருக்குக் கொடுக்கப்படும். 90 ஆயிரம் டெண்டர் கொடுத்த பிறகு, ஏற்கெனவே 50 ஆயிரம் டெண்டர் கொடுத்தவர்கூட 95 ஆயிரத்திற்கு என்று லட்சத்திற்கு என்று ஏலம் கேட்கலாம். எனவே டெண்டர் என்பது அப்செட் பிரைசை நிர்ணயிப்பதற்காக இருக்கிற முறையே தவிர வேறு று அல்ல என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
3
அதைப்பற்றிப் பேசிய உறுப்பினர்கள் எல்லாம், அதிலும் குறிப்பாக நம்முடைய வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜேந்திரன் அவர்கள் இந்தக் கருத்துக்களுக்காக நாட்கள் இந்த அவையைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அவர் பேசிய நாள் ஒன்று, தம்பி திரு. புகழேந்தி அவர்களுக்குப் பதில் சொன்ன நாள் ஒன்று, தன்னிலை விளக்கம் என்ற பெயரால் இந்த நாள் ஒன்று. ஆக 3 நாட்களைப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய கருத்துக்களையெல்லாம்
அவர்
இங்கே
அன்றைக்குச் சொன்னார், குறிப்பிட்டிருக்கிறார்கள். காந்தியடிகளோ அல்லது அண்ணாவோ அல்லது காமராசரோ அவர்கள் எல்லாம் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டால், அவர்களுடைய கல்லறைகளே குலுங்கும் என்று சொன்னார்.
எதிர்க்கட்சி வரிசையிலே நல்ல வார்த்தைகளாகப் போட்டு பேசக் கூடிய நபர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஏனென்றால் இந்த மாமன்றத்திலே இருந்து இன்னும் 4,5 ஆண்டுகளுக்குப் பிறகு நாமெல்லாம் கலைந்து சென்று மீண்டும் இந்த அவைக்கு வருகின்ற நேரத்தில் இதைவிடத் திறமையான பேச்சாளர்களாக இருந்திட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஒருவேளை திரு. ஆல்போன்ஸ் கூறுவதைப் போல நீங்களே நல்ல ஆட்சியை அமைத்தாலும் அமைக்கலாம். ஏனென்றால் ராமனுக்கு 14 ஆண்டு வனவாசம், 12 ஆண்டு தருமனுக்கு வனவாசம். எங்களுக்கு 5 நாள் சிறைவாசம் அதனால் ஆட்சியை அமைப்போம் என்று சொன்னார். அது எல்லாம் ஆண்டுக் கணக்கிலே வாசம். இது நாள் கணக்கிலே