234
நிதிநிலை அறிக்கை மீது
கொடுப்பதற்காக டாஸ்மாக் நிறுவனத்தை 27.7.1983 முதல் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் நிறுவியது. இருந்தாலும் சாராய உற்பத்தியையும் தனி நபரிடமிருந்து எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையையும் அரசு பரிசீலித்து அது இயலாத காரியம் என்று கைவிட்டு விட்டது. எதை இயலாது என்று அந்த அரசு கைவிட்டதோ அதைத்தான் இந்த அரசு இயலும் என்று ஒரு செயல்திட்டமாக உருவாக்கி இன்றைக்குப் புதிய மதுவிலக்குக் கொள்கையின்படி மலிவு மது பானத்தை தயாரிக்கும் முழுப் பொறுப்பையும் அரசு நிறுவனமான டாஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளது. அதே போல டாஸ்கோ நிறுவனம் தயாரிக்க இருக்கிற அந்த மலிவு விலை மது பானங்களை விற்கின்ற மொத்த விற்பனை உரிமையை தனி நபர்களுக்குக் கொடுக்காமல் டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளது.
சில்லறை விற்பனை முறையிலே பல்வேறு கொள்கைகளை பல்வேறு காலக் கட்டங்களில் நிலைமைக்கு ஏற்ப கடைப்பிடித்து வந்த அ.தி.மு.க. அரசின் கொள்கைக்கு மாறாக, சில்லறைக் கடைகளை ஏலம் மற்றும் டெண்டர் முறையிலே இந்த அரசு நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளது ஏலம் மற்றும் டெண்டர் என்று சொன்னவுடன் அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் சில பேர்கள் ஏலம் என்பது ஒரு முறை போலவும், டெண்டர் என்பது வேறு முறை போலவும் கருதிக் கொண்டு அந்த டெண்டரைக் கட்சிக்காரர்களுக்குக் கொடுப்பதற்காகத் தான் அறிவித்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அப்படி அல்ல.
ஒரு அப்-செட் பிரைஸ் கடைகளுக்கு நாம் முடிவு செய்கிறோம். 50 ஆயிரம் என்று அப்-செட் பிரைசை முடிவு செய்து கொண்டு டெண்டர் விடுகிறோம். 8 பேர் 9 பேர் டெண்டர் கேட்கிறார்கள். சீல்டு டெண்டர். அதிலே நாம் 50 ஆயிரம் என்று வைத்திருக்கிறோம், ஒருவர் 60 ஆயிரம் கேட்கிறார், ஒருவர் 70 ஆயிரம் கேட்கிறார், ஒருவர் 90 ஆயிரம் கேட்கிறார் என்றால், 90 ஆயிரம்தான் டெண்டரில் அதிகப்படியானது என்றால் அந்த டெண்டரை வைத்துக்கொண்டு ஆரம்பிக்கப்படும். அப்செட் பிரைஸ் 90 ஆயிரத்திலிருந்து ஆரம்பிப்போம் என்ற நிலையில் பிறகு