250
நிதிநிலை அறிக்கை மீது
ரூபாய்க்கு மேல் 15 லட்சம் வரை வியாபாரம் செய்யக் கூடிய ஓட்டல்களுக்கு, கூட்டு வரி முறை (Compounding tax) ஏற்படுத்தப்பட்டது
அவர்கள் பேசும் போது கர்நாடக மாநிலத்தைப் பற்றி சொன்னார்கள். கர்நாடகத்தில் 1 லட்சம் ரூபாய் turnover இருந்தாலே கூட அங்கே வரி இருக்கிறது. ஆனால் நாம் 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலும் compound- ing tax turnover என்று வைத்திருக்கிறோம். ரூ. 15 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்யப்படுகிற ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில், விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் மீது 5 சதவீதம் பலமுனை வரி இருக்கும் என்று முன்பு தீர்மானிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பை எதிர்த்து ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் உயர்நீதி மன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தார்கள். பிப்ரவரி மாதத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த வரி விதிப்பு முழுமையாகச் செல்லும் என்று தீர்ப்பு அளித்தனர். இதை எதிர்த்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தார்கள். உச்ச நீதிமன்றம் இதற்குத் தடையாணை எதுவும் வழங்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் வரிவிலக்கை எப்படியும் பெற வேண்டுமென்று முயற்சியில் சில தவறான போக்கில் ஓட்டல் உரிமையாளர்கள் இறங்கியுள்ளதாக எனக்குத் தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே சிறு தொழில் அதிபர்கள் கூட்டத்தில் நான் திருச்சியில் பேசும்போது செயற்கை வைர வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை நீக்கவேண்டு மென்ற கோரிக்கையைப் பற்றி அரசு பரிவுடன் ஆய்ந்து கொண்டிருந்தபோது, அந்த செயற்கை வைர வியாபாரிகள் தவறான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்து குறித்தும், அதன் காரணத்தால் செயற்கை வைரத்திற்குத் தொடர்ந்து வரி விதிப்பு நீடிக்க இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தேன்.
து,
இந்தச் செய்தியை ஏடுகளிலே கண்ட ஹோட்டல் உரிமையாளர்கள் அவசரம், அவசரமாக வந்து என்னைச் சந்தித்தார்கள். நான் அவர்களிடம் இதுபோன்ற வசூல் காரியங்களிலே ஈடுபடக்கூடாது என்றும், எனவே இதுவரையில் வசூலித்த தொகையை உடனடியாக