உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

நிதிநிலை அறிக்கை மீது

திரு. ஏ.ஆர். தாமோதரன் அவர்கள், திரு. லட்சுமிகாந்தன் பாரதி - பாரதி குடும்பத்தைச் சேர்ந்தவர், தலைவர் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் - திரு. லட்சுமிகாந்தன் பாரதி, ஐ.ஏ.எஸ்., ஓய்வு பெற்றவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியோடு இந்த அவைக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). நியாய விலைக் கடைகளைப் பற்றியும், பொது விநியோகத்திலே இருக்கின்ற குறைபாடுகளைப் பற்றியும், திர்க்கட்சித் தலைவர் மிக விரிவாக இங்கே பேசி யிருக்கிறார்கள். மற்ற தலைவர்களும், மற்ற உறுப்பினர்களும் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். எதிர்க்கட்சிக்கு சற்றும் சளைக்காமல் ஆளுங்கட்சிக்காரர்களும் பேசியிருக்கிறார்கள். இன்றைக்குக் காலையிலேகூட சரமாரியான கேள்விகளை தம்பி டி. இராஜேந்தர் உணவு அமைச்சரிடத்திலே கேட்டதை யெல்லாம் நீங்கள் அறிவீர்கள். எனவே, எல்லோரும் சேர்ந்து இந்த பொது விநியோக முறையில் ஒரு நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நிதிநிலை அறிக்கையிலே நான் குறிப்பிட்டிருந்தேன், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு, நம்முடைய மாநிலத்திலே நடைபெறுவதை விட மிகச் சிறந்ததாக இந்தப் பொதுவிநியோகமுறை நடப்பதாகச் சொல்லப்படுகின்ற மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, ஓரிரு மாதங்களுக்குள்ளாக அந்த நடைமுறைகளையெல்லாம் பரிந்துரை செய்யக்கூடிய அந்தப் பணியினை ஆற்றிட வேண்டும் என்பதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என்று நான் குறிப்பிட்டேன். கட்சித் தலைவர்களை எல்லாம் கலந்து கொண்டு அந்த அந்தக் கட்சியின் சார்பாக யாரை உறுப்பினராக அந்தக் குழுவிலே அமைக்கலாம் என்ற கருத்தைக் கேட்டு, சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள்ளாக அந்தக் குழு விரைவிலே அறிவிக்கப்படும் என்பதையும் நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

ம்

மாவட்டங்களைப் பிரித்து, நிர்வாகத்தை விரைவுபடுத்த, செம்மைப் படுத்த, ஒரு கருத்து இந்த அரசுக்கு இருப்பதை