உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

நிதிநிலை அறிக்கை மீது

படுகிறது (மேசையைத் தட்டும் ஒலி) என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிறகு, கம்ப்யூட்டர்கள், மாணவர்கள் தற்போது கம்யூட்டர் கல்வி கற்பதிலே மிகுந்த ஆர்வம் காட்டுவதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக, தமிழகத்தில் கம்ப்யூட்டர் சாதனம் மிகவும் ஆர்வமாக வளர்ந்து வருகிறது. கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் கருவிகளுக்கு 3 சதவீதமாக இருந்த வரி இன்றைக்கு 12 சதவீதமாக உயர்த்தப் பட்டுவிட்டது என்று என்று தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டார்கள்.

3

முக்கியமாக கம்ப்யூட்டர் வளர்ச்சி தடைப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு இந்த அரசு 12 சதவீதமாக விதிக்கப் பட்டு இருந்த வரியை 4 சதவீதமாகக் குறைப்பது என்று முடிவெடுத்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி கம்ப்யூட்டர்களுக்கும், அதன் உதிரி னி உ பாகங்களுக்கும் 4 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதைப்போலவே ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தற்போது நல்ல பொழுதுபோக்குச் சாதனமாக விளங்கிவரும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கும், அதன் உதிரி பாகங்களுக்கும் 12 சதவீதமாக விதிக்கப்பட்டிருந்த வரி 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

எழுதுகிற பேப்பர், அச்சடிக்கின்ற பேப்பர், கம்யூட்டருக்கு உபயோகிக்கப்படும் பேப்பர் Printing and Writ- ing Papers ஆகியவைகளுக்கு தற்போது 8 சதவீதம் என்று இருக்கும் வரியை 4 சதவீதமாகக் குறைப்பது என்றும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பையைப் பற்றி, ரங்கநாதன் அவர்கள் ஒரு பெரிய படையை அழைத்துக்கொண்டு வந்தார்கள். இருந்தாலும், தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்று, பால் கொண்டு செல்ல பயன்படுத்தப்