உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

295

படும் பிளாஸ்டிக்குகளுக்கு 8 சதவீத வரி என்று இருப்பதை 4 சதவீதமாகக் குறைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது

பொரி கடலைக்கு தற்போது செய்துள்ள வரிச் சீர்திருத்தத்திற்குப் பிறகு, 12 சதவீதம் வரி என்ற அளவிலே இருப்பதாக ஒரு முறையீடு கூறப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்று, இனி பொரி கடலைக்கு 12 சதவீதம் வரி என்பதிலிருந்து 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

4

,

பதிவு செய்யப்படாத பெயருடன் கூடிய சாதாரண பிஸ்கட்டுகளுக்கு வரியை உயர்த்திவிட்டதாக அவர்களிடம் ஒரு சந்தேகம் உள்ளது. அவர்களுக்கு அந்தச் சந்தேகம் தேவையில்லை. பதிவு செய்யப்படாத பெயரோடு கூடிய சாதாரண பிஸ்கட்டுகளுக்கு 4 சதவீதம் வரிதான் என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன்.

திரு.சொக்கர் சொன்ன ஒன்று. பருப்பு, மிளகாய் மற்றும் மஞ்சள் ஆகிய பொருட்களுக்கு முழு விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டதை உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள். இதனைத் தொடர்ந்து இந்தப் பொருட்களிலேயிருந்து தயாரிக்கப்படும் மாவுக்கும் வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கையை ஏற்று அடுத்த பட்ஜெட்டுக்கு ஏதாவது வேண்டுமல்லவா? அதனாலே இந்தக் கோரிக்கையை ஏற்று - தற்போது 4 சதவீதம் என்று மாவுக்கு இருக்கும் வரி இனி 2 சதவீதம் என்ற அளவுக்குக் குறைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி )

-

ஆயத்த ஆடைகள். Ready-made garments இதுதான் சபநாயகர் மூலமாக வந்த கோரிக்கை.

Ready-made garmentsகளுக்கு புதிய வரி விதிப்பு முறையிலே உள்ள பிரச்சினைகளை என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, முடிந்த வரையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்த அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த வகையிலே வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் ரெடிமேட்