உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

நிதிநிலை அறிக்கை மீது

துணிகளுக்கு 'சி பார்ம்' கிடைக்காத பட்சத்தில், 10 சதவீத வரி கட்ட வேண்டியிருக்கிறது என்ற அவர்கள் தெரிவித்திருக் கிறார்கள். வளி மாநிலங்களுக்கு அனுப்பாமல், தமிழகத்திலே விற்கப்படும் துணிகளுக்கு 8 சதவீதமாக வரி இருக்கிறது. இனிமேல் ரெடிமேட் ஆடைகளை நம் மாநிலத்தில் விற்றாலும் சரி, 'சி பார்ம்' பெற்றோ, பெறாமலோ வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விற்றாலும் சரி, அவர்கள் 4 சதவீத வரி மட்டுமே செலுத்தினால் போதும் என்று முடிவு எடுக்கப்படுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி).

-

மண்ணெண்ணெய் பெட்ரோலியப் பொருட்கள் சங்கத்தின் தலைவரும், முன்னாள் மேலவை உறுப்பினருமான ஏ.ஆர். தாமோதரன் அவர்கள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இப்போது மண்ணெண்ணெய்க்கு லிட்டர் 0.9 பைசா ஒன்றுக்கு 0.9 பைசா அதாவது அது ஒரு பைசாவிற்கும் குறைவாக விலை உயர்த்தப்பட்டிருப்பதாக எழுதி இருந்தார்கள். இந்த வரி மாற்றத்தில் மண்ணெண்ணெய்க்கு ஒரு பைசாவுக்கும், குறைவாக விலை உயர்ந்துவிட்டது என்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள். எனவே, இந்த ஒரு பைசா விலை உயர்வினால், ஏழை எளிய மக்களை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த விலை உயர்வை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு, பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் மண்ணெண்ணெய் வழங்கும்போது, விலையை உயர்த்தாமல், தற்போதுள்ள விலைக்குத் தரப்படுவதற்கு வழிவகை செய்வதோடு, இவ்வாறு விலைக்குறைப்பு தருவதால், நியாயவிலைக் கடைகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசாங்கமே மானியமாகத் தருவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

,

உணவுப் பொருட்களான பருப்பு, மிளகாய், புளி போன்றவைகளுக்கு முழு வரி விலக்கு அளித்ததைத் தொடர்ந்து, திரு. சொக்கரின் பரிந்துரையைத் தொடர்ந்து பனங்கற்கண்டிற்கும் முழுவரி விலக்கு அளிக்கப்படும்

வரிக்கு உட்படும் விற்பனைத் தொகை ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 100 கோடிக்கு 100 கோடிக்கு குறைவாக குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் வரி முற்றிலும் நீக்கப்படுகிறது