உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

301

கலந்து கொண்டு அரிய கருத்துக்களை, நாங்கள் அறிய வேண்டிய கருத்துக்களைச் சீராக, செம்மையாக எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் மற்றும் கட்சிகளின் தலைவர்களும் இங்கே ஆற்றிய உரைகள், இந்த அரசு மேலும் தெம்புடன், திடமுடன், தெளிவுடன் நடைபோடுவதற்குத் துணை நிற்கின்றன என்பதை நன்றிப்பெருக்கோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு எதிர்க்கட்சியினுடைய இலக்கணம் எவ்வாறு இருக்கவேண்டு மென்பதைப் பற்றி நேற்றையதினம் திரு. திருநாவுக்கரசு நான் முன்பொருமுறை சொன்னதை எடுத்துச் சொன்னார். காரணம், அவர்களுடைய தலைவருடைய வாசகத்தை எடுத்துச் சொல்ல அவருக்கு இயலவில்லை. காரணம், கிடைக்கவில்லை. (மேசையைத் தட்டும் ஒலி). எனவேதான் எதிர்க்கட்சியினுடைய இலக்கியம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நான் சொன்னதை அவர்கள் இங்கே குறிப்பிட்டுக் காட்டினார்கள். நான் இங்கே அவர் சொன்னதை நினைவுபடுத்த வேண்டுமே யானால், எதிர்க்கட்சி, ஆளும் கட்சிக்கு, தார்க்குச்சியாக இருக்க வேண்டும். மூக்கணாங் கயிறாக இருக்கவேண்டும் என்றெல்லாம் நான் ஏற்கெனவே

சொன்னை

நினைவுபடுத்தினார். நானும் அதை ஏற்றுக்கொண்டு இப்போதும், அதுதான் என் நிலை என்று சொன்னேன்.

அதுமாத்திரமல்ல. இந்த நிதிநிலை அறிக்கையினுடைய தொடக்கத்திலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

'மடுத்தவா யெல்லாம் பகடன்னானன்உற்ற

இடுக்கண் இடர்ப்பா டுடைத்து'

எனும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப, தடங்கல் நிறைந்த கரடு முரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு, வெற்றி கிட்டும் என்ற திடசித்தத்தோடு இந்த அரசு செயல்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தேன். அதிலேயே, அப்படி இழுத்துச் செல்கின்ற எருதுகளுக்கு, தார்க்குச்சி தேவை, மூக்கணாங்கயிறு தேவை என்பதை, நான் சூசகமாக வலியுறுத்தத்தான்