328
நிதிநிலை அறிக்கை மீது
தனித் தனி மானியக் கோரிக்கைகள் என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது. முன்னர் முன்னர் இல்லாத சில மானியக் கோரிக்கைகள் வருமாறு. பால் வழங்கும் திட்டங்கள், கைத்தறி, துணித் தொழில் சுற்றுலா, சுற்றுச்சூழல், தமிழ் வளர்ச்சி பண்பாடு, செய்தி-திரைப்படத் தொழில் நுட்பம் மற்றும் இயற்கைச் சீற்றம் குறித்த துயர் தணிப்பு என்று அரசு பல புதிய துறைகளிலே பல திட்டங்களையும். புதிய திட்டங்களையும், மேற்கொள்வதை இவை அனைத்தும் காட்டுகின்றன. எனவே சதவீத அடிப்படையில் அரசு பல துறைகளில் செலவினத்தைப் பரவலாக ஆக்கியுள்ளதால் திரு. குமாரதாஸ் அவர்கள் அவர்கள் அது குறைந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டினாரே அல்லாமல் வேறு அல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
மின் கட்டணத்தைப் பற்றியும், அதன் உயர்வைப் பற்றியும் நண்பர் திரு. ரங்கநாதன் அவர்களும் மற்றும் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே திரு.
பழனிசாமி அவர்களும், மற்ற நண்பர்களும் திரு. திருநாவுக்கரசு அவர்களும் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மின் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் வகையிலே ஏற்படுகிற கூடுதல் செலவை ஈடுகட்டிட மின் கட்டண விகிதங்களை ஒவ்வொரு ஆண்டும் திருத்தி அமைக்க வேண்டியிருக்கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர்களும் அறிவார்கள். மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது இது சரிதான். உண்மைதான் என்றும் புலப்படும். மின் கட்டண விகிதங்கள் 1.2.1992ல் 6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகவும், 1-3-1993ல் எச்.டி.-க்கு 18 சதவிகிதமும். எல்.டி.க்கு 13 சதவிகிதமும், 1.3.1994ல் எச்.டி.க்கு 22 சதவிகிதமும், எல்.டி.க்கு 17 சதவிகிதமும் 1.2. 1995ல் எச்.டி.க்கு 15 சதவிகிதமும், எல்.டி.க்கு 15 சதவிகிதமும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளன.
1996 - 97ல் தேர்தல் வந்த காரணத்தால் தேர்தலுக்கு முன்பு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதை அவர்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். நாமும் ஒப்புக் கொண்டாக வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 15.2.1997 முதல் அமலுக்கு வந்த மின் கட்டண விகிதங்கள்