கலைஞரின் சட்டமன்ற உரைகள்
327
தான் இருந்தார்கள். அந்த ஒரு அமைச்சர்தான் அவைகளை யெல்லாம் கவனித்துக் கொண்டிருப்பார். பிற்படுத்தப்பட்டோர், அதைப்போல அரிசன நலன் இவைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார். இரண்டுமே சரியாக நடைபெறமுடியாத ஒரு சூழ்நிலை. அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் இவர்கள் சரியாகச் செய்யவில்லை என்ற குறையையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதனால் நான் அண்ணா அவர்களுக்குப் பிறகு, பொறுப்புக்கு வந்தவுடன், அந்தத் துறையைப் பிரித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்று ஒரு துறையைப் புதிதாக உருவாக்கி அதற்கு ஒரு தனி அமைச்சரை நியமித்து, அந்தத் துறை பிரிக்கப்பட்ட காரணத்தால், அன்றைக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு 1 இலட்சம் ரூபாய், 2 இலட்சம் ரூபாய்தான் நிதியொதுக்கீடு ஆனால் இன்றைக்கு 34 கோடி ரூபாய், 54 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்படுகிறது என்றால் அன்றைக்குச் செய்த அந்தக் காரியம்தான். அந்த மகத்தான காரியம்தான் இன்றைக்கு இந்த மாபெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
1996-97, 1997-98ஆம் ஆண்டுகளில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் நலனுக்கு ஒரு மானியக் கோரிக்கையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் நலனுக்கு தனி மானியக் கோரிக்கையும் உள்ளது. அதைப் போன்று சமூக நலத் துறைக்கு 1957 - 58ஆம் ஆண்டுகளில் தனி மானியக் கோரிக்கை ஏதுமில்லை. Community Development என்ற பெயரில் ஒரே ஒரு மானியக் கோரிக்கை மாத்திரம்தான் இருந்தது. ஆனால் தற்போது ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், தொழிற்சாலை உள்ளிட்ட தொழிலாளர் நலன், சமூக நலன், வீட்டு வசதி, நகர்ப் பகுதி வளர்ச்சி, நுகர்பொருள் வழங்கல் போன்ற துறைகளுக்குத் தனித் தனியாக மானியக் கோரிக்கை கள் வந்துவிட்டன. இவைகளையும் மறந்துவிடக் கூடாது. இதைப்போன்றே தொழில் துறைக்கு 1957-58, 1966- 67 ஆம் ஆண்டுகளில் ஒரே ஒரு எண் 20 மானியக் கோரிக்கைதான் இருந்தது. ஆனால் தற்போது அது தொழில் துறை, கதர் கிராமத் தொழில், ஊரகத் தொழில் போன்றவற்றிற்கு
1