326
நிதிநிலை அறிக்கை மீது
1975 - 76இல் வருவாய், 563.56 கோடி ரூபாய்; 1980 - 81இல் வருவாய், 1,279.96 கோடி ரூபாய்; 1989 - 90இல் வருவாய், 4,281.57 கோடி ரூபாய்; 1997 - 98இல் வருவாய், 12,641.05 கோடி ரூபாய்.
எங்கேயிருந்து எங்கே வந்திருக்கிறோம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 1938-39இல் 16 கோடி ரூபாயிலிருந்து, இன்றைக்கு 12,641 கோடி ரூபாய் பட்ஜெட் என்கிற அளவுக்கு வரவு வளர்ந்திருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தைவிட, இந்தக் காலத்திலே ஏன் விகிதாச்சாரம் குறைந்தது என்ற ஒரு நல்ல கேள்வியை அவர்கள்
கேட்டார்கள். “மாநில சட்டமன்றங்கள்" என்ற தலைப்பில், இந்த ஆண்டு, இப்போது 6.75 கோடி ரூபாய்க்கு ஒரு மானியம் குறிப்பிடப் பட்டுள்ளது; படித்தால் தெரியும். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்து நிதிநிலை அறிக்கையில், இந்தத் தலைப்பில், ஒரு மானியமே கிடையாது. 'பொது நிர்வாகம்' என்ற தலைப்பிலே தான், அப்போது மாநிலச் சட்டமன்றங்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. அந்த ஒரு தலைப்பிலே இருந்தது. தற்போது, 'மாநிலச் சட்டமன்றம் ஆளுநர், தேர்தல்கள்' என்ற 3 மானியங்களுக்கான தனித் தனி ஒதுக்கீடாக செய்யப்படுகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அதனால், தலைப்பை மாத்திரம் எடுத்துக் கொண்டு, அப்போதுள்ள விழுக்காட்டோடு ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாக இருக்க முடியாது. அதுமாத்திரமல்ல: 1957-58ஆம் ஆண்டில் வருவாய் மானியக் கோரிக்கைகளின் எண்ணிக்கை 34. 1966-67ஆம் ஆண்டில் அது 37 ஆகவும், 1996-97இல் 51 ஆகவும் உயர்ந்துள்ளது. 1997-98ஆம் ஆண்டில், அந்த மானியக் கோரிக்கைகளின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. அதைத்தான் அன்றைக்கு நான் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னேன். அதற்கான விவரங்களை இப்போது சொல்கிறேன்.
1957-58ஆம் ஆண்டில், ஆதி திராவிடர் முன்னேற்றத் திற்கு ஒரே ஒரு மானியக் கோரிக்கை மாத்திரம் இருந்தது. 'ஹரிஜன் வெல்ஃபேர்'லேதான் அமைச்சர் இருப்பார். அந்த இலாகாவிலேதான் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இருக்கும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எல்லோரும் அதிலே