கலைஞரின் சட்டமன்ற உரைகள்
325
1997-98இல், ரூ. 5,317 கோடியாகத்தான் உயர்ந்துள்ளது; கொஞ்சம்தான் உயர்ந்துள்ளது என்று குறைபட்டுக் கொண்
டிருக்கிறார். அதற்கும் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். 1996 - 97 திருத்திய மதிப்பீட்டில், அதிக தொகையாகக் காணப்படுவதற்குக் காரணம், வெள்ள நிவாரணத் தொகை ரூ. 195 கோடியைச் சேர்த்த காரணத்தால், ரூ. 5,240 கோடியாக இருந்தது. அந்த 5,240 கோடி ரூபாயில், 195 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதிக்காக நாம் அளித்ததைக் கழித்து விட்டால், ரூ. 5,045 கோடியாகத்தான் இருக்கும். அதோடு இந்த 5,317 கோடியை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், 272 கோடி ரூபாய் சமூகப் பணிகளுக்காக அதிகம் ஒதுக்கியிருக்கிறோம் என்ற உண்மை புரியும். இவையெல்லாம் எடுத்துச் சொல்லப்படாத காரணத்தால், திருநாவுக்கரசு அவர்களுக்குச் சந்தேகம் என்ற காரணத்தால், அந்தச் சந்தேகத்தை இந்த விளக்கம் மூலமாக நான் போக்கி இருப்பதாக நம்புகிறேன்.
அடுத்து, நம்முடைய தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் பேசிய நண்பர் குமாரதாஸ் அவர்கள்- வரவில்லை என்று கருதுகிறேன்; பொது விவாதத்திலே பேசிவிட்டு, என்ன பதில் அளிக்கிறோம் என்பதைக் கேட்கின்ற ஆர்வம், இனிமேலாவது குமாரதாஸ் அவர்களுக்கு வரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்; எதிர்க்கட்சித் தலைவருக்கும் இதனை விண்ணப்பம் செய்து கொள்கிறேன்; அவர்கள் பேசும்போது, முக்கியமான கருத்தை எடுத்துச் சொன்னார்கள். சிந்திக்க வேண்டிய, சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய, அது எப்படி என்பதை அறிய வேண்டிய, ஆராய வேண்டிய கருத்தை, குமாரதாஸ் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள். காமராஜர் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட, எல்லாத் துறைகளிலும் குறைந்த சதவிகிதம் ஒதுக்கப் பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். தமிழக அரசு நிதிநிலை அறிக்கையின் வரலாற்றைப் பார்த்தால்,
1938 - 39இல் வருவாய், 16.14 கோடி ரூபாய்; 1952 - 53இல் வருவாய், 58.42 கோடி ரூபாய்; 1965 - 66இல் வருவாய், 172.80 கோடி ரூபாய்;