உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

447

நன்றாக அறிவீர்கள். கட்டபொம்மனுக்குக் கோட்டை கட்டினோம். மருதுபாண்டியருக்கு நினைவகம் அமைத்தோம். பூலித்தேவனுக்கு மாளிகை கட்டினோம். சுந்தரலிங்கம் நகர் உருவாக்கினோம். விசுவநாததாஸ் நினைவு இல்லம், சுபாஸ் சந்திரபோஸ் சிலை, தில்லையாடி வள்ளியம்மை நினைவுச் சின்னம், பெரியார் நினைவு சமத்துவபுரம், காமராஜர் நினைவகம், காமராஜர் உள்நாட்டு விமான முனையம், இராஜாஜி நினைவகம், ஜீவானந்தம் நினைவகம், பக்தவத்சலம் நினைவகம், கக்கன் சிலை, தியாகிகள் மணிமண்டபம், சிப்பாய்க் கலகத்திற்கு நினைவுத்தூண். நாமக்கல் கவிஞர் மாளிகை, பொன்விழா நினைவுச் சின்னம். தியாகிகள் மணிமண்டப முகப்பில் சங்கரலிங்கம் மற்றும் பாஷ்யம் ஆகியோர் சிலைகள். அதை நீங்கள் யாரும் பாராட்டிக்கூடப் பேசவில்லையே. த.மா.கா.விலே பேசியவர்கள் யாரும் சங்கரலிங்கத்திற்கு சிலை. பாஷ்யத்திற்கு சிலை, இதை யாரும் பாராட்டிப் பேசாதது வருத்தத்திற்குரியது. இவ்வளவு சீக்கிரம் அவர்களை மறந்துவிடக் கூடாது.

கட்டபொம்மனுக்கு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு விழாவிலே கேட்டுக் கொண்டதற்கிணங்க, நினைவூட்டிய தற்கிணங்க, கயத்தாற்றிலேயே கட்டபொம்மனுக்கு புகழாஞ்சலி - இந்த ஆண்டு 200வது ஆண்டை நினைவுபடுத்துகின்ற வகையிலே புகழாஞ்சலி. அதைப்போல அதற்கு அடுத்த ஆண்டு மருதுபாண்டியருக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலே நினைவாஞ்சலி காமராஜருடைய மணிமண்டபம் என்ன ஆயிற்று என்று நம்முடைய அப்பாவு அவர்கள் கேட்டார்கள். நம்முடைய டாக்டர் இராமன் அவர்களும் கேட்டார்கள். 19-4-1998 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற ஜீவானந்தம் மணிமண்டபத் திறப்பு விழாவிலே பேசும்போது கன்னியாகுமரி கடற்கரையிலே காமராஜர் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் காமராஜர் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தேன். இந்த அறிவிப்பை யொட்டி, அதற்கான ஏற்பாடுகள் உடனடியாக எடுக்கப்பட்டன. எப்போதும் என்னுடைய அறிவிப்புகள் அறிவிப்புகளாக