உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

463

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லையில்லை. துரோகம் செய்வதாகப் பொருள் என்று பேசியிருக்கிறீர்கள்.

நீங்கள்

திரு. சோ. பாலகிருஷ்ணன்: அப்படிச் சொல்லியிருந்தால் மாற்றிக்கொள்ளலாம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அது உங்கள்

விருப்பம்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: 152 அடி என்பது எப்பொழுது சாத்தியப்படும் என்றால், Baby dam முடித்திருக்க வேண்டும். நாமும் நியாயத்தைப் பார்க்க வேண்டும். Baby dam கட்டாமல், 152 அடி என்று சொல்வது முறையல்ல. ஆனால் Baby dam கட்டுவதற்கு ஏற்கெனவே சாத்தியக்கூறுகள் எல்லாம் ஏற்பட்டு, அதைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். கட்டும்பொழுது கேரள அரசு அதைத் தடுத்துவிட்டது. அப்படித் தடுத்ததை நிறுத்திக்கொண்டு, கட்டுவதற்கான அனுமதியும் தந்து 145அடிக்கு அவர்கள் உடனடியாக ஒப்புதல் தருவார்களேயானால் அதைப் பற்றிப் பேசலாம். 152 அடி என்பதுதான் நம்முடைய குறிக்கோள். ஆனால் கிடைப்பதையும் விட்டுவிட வேண்டுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

திரு. கே. சுப்பராயன்: Point of order. பேரவைத் தலைவரவர்களே, முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பேசியதை ஒட்டி பதில் அளிக்கிறார்கள். நான் ஒரு மிக முக்கியமான பிரச்சினையைத் தங்கள் மூலம் கொண்டுவர விரும்புவது என்னவென்றால், நாளை நடைபெற இருக்கின்ற பேச்சுவார்த்தையின் தன்மைக்கு உள்ளே நாம் போவது என்பது விவேகக் குறைவானதாக அமைந்து விடக்கூடும். பிரச்சினை முடிவுக்கு வருவதற்கு அதுவேகூட ஒரு எதிர்மறை அம்சமாகத் தோன்றிவிடக்கூடும் என்பதால், அருள்கூர்ந்து இந்த விவாதத்தை இதோடு விட்டுவிட்டு அடுத்த பிரச்சினைக்குப் போவதுதான் புத்திசாலித்தனம். புத்திசாலித்தனமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: சுப்பராயன் அவர்களுக்கு இந்தப் புத்திசாலித்தனம் முன்பே வந்திருக்க