கலைஞரின் சட்டமன்ற உரைகள்
473
1996-97ஆம் ஆண்டில் பருப்பு, மஞ்சள், மிளகாய், வெல்லம், கையினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டி போன்ற 14 பொருள்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. சமையல் எரிவாயு, டீசல் உள்ளிட்ட 30 இனங்களுக்கு வரிக் குறைப்பு செய்யப்பட்டது. 1997- 98ஆம் ஆண்டில் பருத்தியினால் ஆன பின்னலாடைகள், மாட்டுத் தீவனம், நாட்டு மருந்துகள், ஊனமுற்றோர் பயன்படுத்தும் சைக்கிள், கயிறு போன்ற 24 இனங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. யூரியா, தேங்காய் மற்றும் கொப்பரைகள், பருத்தி, தமிழ்த் தட்டச்சுப் பொறிகள், வணிகச் சின்னமுடைய நெய் மற்றும் வெண்ணெய் உள்ளிட்ட 34 இனங்களுக்கு வரிக் குறைப்பு செய்யப்பட்டது
1998-99ஆம் ஆண்டில் சமையல் எண்ணெய், காசினிக் கீரை, கணினி மென்பொருள் கணினி மென்பொருள் உள்ளிட்ட 6 இனங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மசாலாப் பொடிகள், ஐஸ்கிரீம் போன்ற 8 இனங்களுக்கு வரிக் குறைப்பு செய்யப்பட்டது.
1999-2000 ஆண்டில் சூரிய ஒளியிலே இயங்கும் விளக்குகள், புடவை விளிம்புப் பட்டிகள், காலணிப் பட்டிகள், பருத்தி நூல் கயிறு, பிரம்பினால் செய்யப்பட்ட தட்டி, கூடை மற்றும் முறம் போன்ற 10 இனங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. கணினிகள், தொலைக்காட்சிப் படம் எடுக்கும் கருவிகள், டிரான்சிஸ்டர்கள், வணிகச் சின்னம் ட்ட ரஸ்க், வாழ்த்து அட்டைகள், சாம்பிராணி வில்லைகள் உள்ளிட்ட 54 இனங்களுக்கு வரிக் குறைப்பு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு, 2000–2001ல் நித்திய கல்யாணி இலை மற்றும் வேர், காது கேட்கப் பயன்படும் கருவிக்கான கம்பி, அரைஞாண் கயிறு, பதப்படுத்தப்பட்ட பால், நாட்டுச் சர்க்கரை, தமிழ் தினசரி காலண்டர்கள், காகித உறைகள் உள்ளிட்ட 10 இனங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. மொசைக் கற்கள், துணி துவைக்கும் இயந்திரங்கள், அனைத்து வகை மின்சக்திக் கருவிகள், உபகரணங்கள், வறுகடலை போன்ற 15 இனங்களுக்கு வரிக் குறைப்பு செய்யப்பட்டது
இந்த அளவிற்கு வரிக் குறைப்பு, முழு வரி விலக்கு தந்த கழக அரசு இந்த 5 ஆண்டுகளில் எந்தெந்த இனங்களுக்கு