உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

497

மாண்புமிகு பேரவைத் தலைவர்: விவசாயத்தைப் பற்றி இல்லை. இப்போது இந்தப் பிரச்சினையைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமா?

திரு. பி.ஆர். சுந்தரம்: என்னை நீங்கள் allow பண்ணுங்கள். ஒன்றே ஒன்று...

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை. நான் உங்களை அப்போது allow பண்ணினேன். இப்போது allow பண்ணவில்லை. இந்தப் பிரச்சினையைப் பற்றி என்றால் பேசுங்கள். இல்லையென்றால் நீங்கள் உட்காருங்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

திரு. பி.ஆர். சுந்தரம்: இல்லை, இல்லை, நான் ஒன்றே ஒன்றை...

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் (குறுக்கீடு) நான் இப்போது அனுமதிக்க முடியாது. நீங்கள் நினைக்கிற போதெல்லாம் எழுந்து நிற்க முடியாது.

திரு. பி.ஆர். சுந்தரம்: என் அண்ணன்களை எல்லாம் நீங்கள் பேச அனுமதித்தீர்கள். ஆனால், என்னை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள்...

மாண்புமிகு பேரவைத் தலைவர்: எல்லோரும் உங்களுக்கு அண்ணன்கள்தான். நாங்கள்தான் ஆகாதவர்கள். நீங்கள் உட்காருங்கள்

திரு. பி.ஆர். சுந்தரம்: ஒரேயொரு வரி. நான் இந்நேரம் பேசியிருப்பேன். இந்நேரம் பேசி முடித்திருப்பேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நீங்கள் இப்படி அடிக்கடி எழுந்து நிற்பதை நான் அனுமதிக்க முடியாது. உங்களுக்கு முதலிலே அனுமதி கொடுத்துவிட்டேன். நீங்கள் உட்காருங்கள்.

திரு. பி.ஆர். சுந்தரம்: இந்நேரம் பேசி முடித்திருப்பேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: சரி, சொல்லுங்கள். திரு. பி.ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விவசாயிகளுக்குச் செய்துள்ள திட்டங்களை

17 - க.ச.உ. (நிஅ) ப-2