உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Goo 2370

528

நிதிநிலை அறிக்கை மீது

இதையெல்லாம் குப்பைக் கூடையிலே போட்டுவிட்டார்களே என்பதுதான் எனக்குள்ள வருத்தம். அதையெல்லாம்விட எனக்கு இன்னொன்று 77 இலட்சம் ரூபாய் கொடுக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம். அதையும் போட்டு தன்னையும் குப்பைத் தொட்டியிலே போட்டுக் கொண்டு விட்டார்களே (மேசையைத் தட்டும் பலத்த ஒலி) என்கின்ற அந்தக் கவலையும் எனக்கு உண்டு என்பதைச் சொல்லி நான் கேள்விப்பட்டேன், நேற்றைக்கு நம்முடைய அக்கா பொன்னம்மாள் அவர்கள் பேசிய பேச்சை பத்திரிகையிலே படித்தேன். நான் அவைக்கு வர இயலவில்லை. ஒரு தாய் உள்ளத்தோடு அவர்கள் பேசிய பேச்சுக்கு என்னுடைய கனிவான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியினுடைய சட்டசபை யினுடைய கட்சித் தலைவர் தம்பி கணேசன் அவர்கள் பேசிய பேச்சும் என்னை ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. என்னை குறை சொல்லி சிலர் பேசிய பேச்சுக்கள் எல்லாம்கூட என்னை ஊக்கப்படுத்துவதற்காகத்தான் என்று நான் எடுத்துக் கொள்ளவேன் என்று கூறி உங்களுக்கெல்லாம் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நன்றி தெரிவிப்பதால், நாளைக்கு நன்றி தெரிவித்துவிட்டார்; அவ்வளவுதான்; “கடைசியாக நன்றி தெரிவித்துவிட்டார் விடை பெற்றுக்கொண்டார்" என்று யாரும் கருதிக்கொள்ளக் கூடாது. மீண்டும் சந்திப்போம் வணக்கம். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி).

894.8115 TAM