கலைஞரின் சட்டமன்ற உரைகள்
527
கேவலமாகக் கருதுபவனல்ல. 'குப்பைத் தொட்டி' என்ற பெயரில் நானே ஒரு கதை எழுதி, அது பல மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டு, பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி) உலக மொழிகளிலே எல்லாம் 'குப்பைத் தொட்டி' மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதனை நம்முடைய அழகிரி போன்றவர்கள் படித்திருப்பார்கள் என்று கருதுகிறேன், பெயர் தான் குப்பைத் தொட்டி, ஆனால் அதிலே பல விஷயங்கள் இருக்கும் விஷயங்கள் இருக்கும். ஒரு குப்பைத் தொட்டியிலே என்னென்ன இருக்கும் என்று அதிலே போடப்படுகின்ற காகிதங்களிலே உள்ள ஒவ்வொன்றும் கதை சொல்வதைப்போல ஒரு சிறுகதை எழுதி யிருந்தேன். அது இந்தியில், மலையாளத்தில், கன்னடத்தில், தெலுங்கில், ஆங்கிலத்தில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு பலருடைய பாராட்டைப் பெற்ற கதை. அதனால் குப்பைத் தொட்டியிலே போட்டதால் நான் ஒன்றும் வருத்தப்படவில்லை. எனக்குள்ள வருத்தமெல்லாம் அந்த நிதிநிலை அறிக்கையிலே கருணாநிதி என்ற பெயர் இருக்கிறது என்பதால் அதைக் குப்பைத் தொட்டியிலே போட்டால் நான் வருத்தப்படப் போவதில்லை. நான் மிகவும் கேவலம், அவ்வளவு பெரிய ஆள் அல்ல. என்னைக் குப்பைத் தொட்டியிலும்
போடலாம்,
சாக்கடையிலும் போடலாம். நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூடியவன் அல்ல. அண்ணாவைப் போல எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்கின்ற அந்தக் கொள்கையைப் பின்பற்றி நடந்து கொண்டிருப்பவன் நான். ஆகவே, நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. எனக்குள்ள வருத்தம் எல்லாம் அதிலே, அந்த நிதிநிலை அறிக்கையிலே, திருவள்ளுவருடைய குறளும் இருக்கிறதே. அதைக் குப்பைத் தொட்டியிலே போடலாமா? பெரியார் சமத்துவபுரத் திட்டம் இருக்கிறதே, அதைப் போடலாமா? அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் இருக்கிறதே, அவருடைய பெயர் இருக்கிறதே, அதைப் போடலாமா? அருமை நண்பர் எம்.ஜிஆர் சத்துணவுத் திட்டமும் அதில் இருக்கிறதே? அதைக் குப்பைத் தொட்டியிலே போடலாமா? தியாகிகள் பெருந் தலைவர் காமராஜருடைய பெயர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தினுடைய பெயர், அண்ணல் அம்பேத்கர் அழகுமுத்துக்கோனுடைய பெயர், மற்றும் தலைவர்களுடைய பெயர்களெல்லாம் அடங்கிய திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையிலே சொல்லப்பட்டிருக்கின்றன.
பெயர்,