526
அந்த
ஒலி)
நிதிநிலை அறிக்கை மீது
நேரத்திலும் நான் எப்படி எங்கள் திராவிட முன்னேற்றக் கழக தோழர்களை உடன்பிறப்புக்கள் என்று அழைக்கின்றேனோ, உடன்பிறப்புக்களாகத்தான் உங்களையெல்லாம் கருதிக்கொண்டிருக்கின்றேன் நான். (மேசையைத் தட்டும் நான் இந்த 14 ஆண்டுக்காலம் செயல்பட்டு இருக்கின்றேன். குறைவுகள் இருக்கலாம். ஆனால், இந்த 14 ஆண்டுக்கால ஆட்சியில், குற்றங்கள் என்று சொல்லப்பட்டு, ஊழல்கள் என்று சொல்லப்பட்டு, அவை நிரூபிக்கப்பட்டன என்ற எந்த சான்றும் கிடையாது என்பதும் உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும் நீங்கள் சொன்னவைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டிருக் கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி)
வீடும்
பனியன் வரியை குறை என்று சொன்னால், குறைத்திருக் கிறோம். கோட்டை அமீருக்கு நிதி கொடு என்று சொன்னால், பதக்கம் கொடு என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னால் கொடுக்கிறோம். அது மாத்திரம் அல்ல; அவர்களுக்கு வீடு கொடு என்று கட்டளையிட்டார். வீடு கொடுத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது கொடுக்கப்பட்டு விட்டது. அவர்கள் குடும்பத்தினருக்கு வேலை கொடு என்று சொன்னார், அவர்களுக்கு வேலையும் கொடுக்கப்பட்டு விட்டது. இப்படி நான் ஒவ்வொன்றாகச் சொல்லவிரும்பவில்லை. தனிப்பட்ட முறையிலும் சரி, நண்பர்கள் என்ற முறையிலும் சரி, அங்கத்தினர்கள் அல்லது அவையின் உறுப்பினர்கள் என்ற முறையிலும் சரி, நீங்களும் ஆட்சியில் ஒரு அங்கம், என்கின்ற முறையில் எல்லோருக்கும் எங்களால் ஆன எங்களுடைய கடமைகளை ஆற்றியிருக் கிறோம்.
இதிலே சில நேரங்களில் நானோ, அமைச்சர்களோ ஆத்திரப்பட்டுப் பேசியிருந்தால் அவைகளையெல்லாம் நீங்கள் பொருட்படுத்தக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏதும் ஏற்படவில்லை. உங்களுடைய ஆத்திரத்தைத்தான் நாங்கள் தாங்கிக் கொண்டிருந்திருக் கிறோமே அல்லாமல் எங்களுடைய ஆத்திரம் எதுவும் வெளிப்பட்டுவிடவில்லை என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.
நேற்றைக்குக்கூட இந்த அவையிலே நிதிநிலை அறிக்கை ஒரு குப்பைக் கூடையிலே போடப்பட்டது என்று கேள்விப்பட்டேன். குப்பைக் கூடையை நான்
நான்