கலைஞரின் சட்டமன்ற உரைகள்
525
அதுபோல வணிகர்கள், வணிகர்களை அழைத்து வைத்துப் பேசிதான், கடந்த 2 ஆண்டு காலமாக தமிழ்நாடு அரசு தன்னுடைய நிதிநிலை அறிக்கையை தயார்செய்து, அவர்கள் கோருகின்ற சலுகைகள், அவர்களுடைய கோரிக்கைகள் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து, தக்க தீர்வு கண்டு அந்த வகையிலேதான் வரி விதிப்பதை திராவிட முன்னேற்றக்கழக அரசு ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கிறது. அதைப்போல, விவசாயிகளை அழைத்து வைத்துப்பேசி, அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அவைகளையும் நிதிநிலை அறிக்கையிலே நாம் வெளியிட்டிருக்கின்றோம் என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கின்றேன்.
அ
ஏராளமான
நிறைவாக ஒன்றிரண்டைச் சொல்ல விரும்புகின்றேன். கடந்த காலத்திலே இந்த அவையில் 1996-1997, 1997-1998 வரையில் என்று வைத்துக்கொள்ளலாம். பாராட்டுக்கள், நானே கூட எழுந்து வெளியிலே சென்று விடலாமா என்ற அளவிற்கு, வெட்கப்படுகின்ற அளவிற்கு ஏராளமான பாராட்டுக்கள். எதிர்க்கட்சியானாலும் சரி, தோழமை கட்சிகளானாலும் சரி, எல்லா கட்சிகளின் சார்பிலும் அப்படிப்பட்ட பாராட்டுக்கள் எனக்கு குவிந்தன. அண்ணா சொல்வதைப் போல, எனக்கு அந்தப் பாராட்டுக்கள் எல்லாம் வரும்போது, நான் மிகவும் உங்களுக்கு கடன்பட்டிருக்கின்றேன் என்று அப்போது எண்ணினேன். ரொம்ப கடன்படுகிறேனே, இவ்வளவு பாராட்டுகிறார்களே, என்ன செய்வது. எப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்று எண்ணினேன். நல்லவேளையாக அவைகளை எல்லாம் குறைத்துக்கொண்டு பாராட்டுவதற்கு பதிலாக என்னை தாக்கி சில பேர் பேசி இருக்கிறீர்கள். அப்போதும் கடன் தீர்ந்ததாக சொல்ல முடியாது. பாராட்டுத்தான் அதிகம். இப்போது ப்போது குறை சொல்வது குறைவு. திட்டுவது குறைவு, தாக்குவது குறைவு. இன்னும் கடன் தீரவில்லை என்ற கவலை எனக்கு இருக்கின்றது என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள் கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)
இந்த 14 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து, எந்தவொரு நேரத்திலும் ஆணவமாக நான் செயல்பட்ட தில்லை. உங்களுடைய கோரிக்கைகளை நான் அலட்சியப் படுத்தியதில்லை. உங்களை ஏதோ சட்டமன்ற உறுப்பினர்கள், நான் முதலமைச்சர், நாங்கள் எல்லாம் அமைச்சர்கள் என்ற அளவிலே என்றைக்கும் உங்களைப் பார்த்ததில்லை. எல்லா