உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

53

வேறு ஒரு செய்தியும் காதில் விழுந்தது. அத்தனை பைப்புகளும் சர்க்காருடைய மராமத்து இலாகாவிலிருந்து வரவழைக்கப் பட்டது என்று சொல்லப்பட்டது. இந்த 30,000 ரூபாய் மதிப்புள்ள பைப்புகளும் அரசாங்க இலாகாவிலிருந்து தருவிக்கப்பட்டதுதானா? இந்த பைப்புகள் எங்கிருந்து வந்தன? மாயாபஜாரில் வருவதுபோல் வந்து மறைந்துவிட்ட இந்தப் பைப்புகளின் வரலாறு என்ன? அதுமட்டுமல்ல, ஊர்வலத்திற்கு மீன் இலாகா ஜீப் கார் எம்.எஸ்.வி. 6907 பயன்படுத்தப்பட்டது. டெல்லி பட்டின குடியரசு தின விழாவிலே எத்தகைய ஒரு அலங்காரத்தோடு அது வெளியே விடப்பட்டதோ அதே அலங்காரம் கலையாமல் இங்கே ஒரு கட்சித்தலைவருடைய பிறந்த தின விழாவிலே அலங்காரமாக பவனிவருவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் என்ன பொருள்? முதல் நாளே அமைச்சர் பூவராகன் அவர்கள் அந்த எம்.வி. 6907 நம்பருடைய அரசாங்க ஜீப் காரின் அலங்காரத்தைப் பார்வையிட்டிருக்கிறார்கள். அது மறுதினம் சுற்றுலா விடப்பட்டுள்ளது. அன்றையதினம் கடற்கரையிலே பொதுக் கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூட்ட மேடை லிப்ட் பொதுப் பணித்துறை இலாகாவிலிருந்து எடுத்துவரப்பட்ட லிப்டாகும். இன்னும், பொதுப்பணித்துறை டிராக்டர்கள் அலங்கரிக்கப்பட்டு பிறந்த தின விழாவின்போது ஊர்வலமாக விடப்பட்டிருக்கின்றன. இதோ அந்த டிராக்டர்களின் புகைப்படங்கள். இதைவிட இந்தச் சர்க்காரின்மீது நம்பிக்கையில்லை என்று தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதாரம் வேண்டுமா? இதற்கு சரியான பதிலை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன்

திரு. பழனி அவர்கள், 45 கோடி மக்களின் தலைவர் காமராஜ் என்று சொன்னார். நான் பெருமைப்படுகிறேன், பாராட்டுகிறேன். அத்தகைய மாபெரும் தலைவர் ஒருவருடைய விழா பொதுமக்கள் அனைவராலும் பெருமையோடும் பூரிப்போடும் கொண்டாடப்பட வேண்டியிருக்க அதை ஒரு அரசாங்க விழாவாக்கி அந்த விழாவிற்கே ஊனம் உண்டாக்கி விட்டீர்களே, அவருடைய விழாவிற்கே ஒரு களங்கத்தை உண்டு பண்ணி விட்டீர்களே என்று காமராசர் சார்பில் குற்றம்சாட்ட