உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நாங்கள்

அவருடைய பிறந்ததின விழாவின்போது, எங்களுடைய பத்திரிக்கையில் வாழ்த்துச் செய்தி பிரசுரித்தோம். அவருக்கும் அனுப்பியிருந்தோம். எங்கள் அண்ணாவும் அவரை வாழ்த்திப் பேசினார். காமராஜ் வேண்டுமானால் அண்ணா அவர்களின் பிறந்த தின விழாவிற்கு வாழ்த்து அனுப்பாது இருந்திருக்கலாம். அவர்கள் கட்சியிலே அண்ணா பிறந்த நாள் விழாவைக் கேலி பேசும் பண்பாளர்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் நல்ல பண்பாளர்கள் பாசறையில் வளர்ந்திருக்கக் கூடிய நாங்கள் இன்றைய தினம் காமராஜர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியதைக் குறைகூற முன் வரவில்லை. ஆனால் அந்தப் பிறந்தநாள் விழா ஒரு கட்சித் தலைவருக்கு நடத்துகின்ற விழாவாக இருந்ததா? சர்க்கார் நடத்துகின்ற விழாவாக நடைபெற்றதா? என்றுதான் ஆராய வேண்டும். அது சர்க்கார் திருவிழாவாகத்தான் நடைபெற்றது. ஜனநாயக சோஷலிச வாரம் என்ற முறையில் நடைபெற்றது. பட முதலாளிகளும், சினிமா அதிபர்களும், மில் ஓனர்களும் அங்கங்கே பல இலட்சம் செலவில் சென்னை நகரில் வளைவுகள் போட்டார்கள். 'ஜனநாயக சோஷலிசம் என்றா சொல்கிறீர்கள். ஜனநாயக போட்ட சோஷலிசம் என்றால் நாங்கள் வளைவுகளுக்குள்ளே சற்று குனிந்து செல்லுங்கள்' என்று திரு. காமராஜரைப்பார்த்துச் சொன்னார்கள். அது பற்றி நான் கவலைப் படவில்லை! ஆனால் நடந்தது என்ன? அந்த விழாவுக்கு ஆயிரக்கணக்கான கொடிகள் பறக்கவிடப்பட்டன. அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் பறக்கவிடப்பட்ட கொடிகளை எங்கள் கட்சியிலுள்ள அன்றாடம் காய்ச்சிகள் மூங்கில் மரங்களில் பறக்கவிடுவது போல் பறக்க விட்டார்களா? ஒவ்வொரு கொடியும் 20 அடி உயரமுள்ள ஒரு பைப்பிலே பறக்க விடப்பட்டது. ஒரே மாதிரியாக 20 அடி உயரமுள்ள இரும்பு பைப்புகள், ஒரு அடி 2 ரூபாய் விலையுள்ள பைப்புகள் 980. ஆதாவது ஏறத்தாழ 30,000 ரூபாய் மதிப்புள்ள பைப்புகள் தருவிக்கப்பட்டிருந்தன. அந்தப் பைப்புகள் எங்கிருந்து வந்தன? அந்த மாதிரி பைப்புகள் சர்க்காரிடம் 80 இலட்சம் ரூபாய் காண்டிராக்ட் கேட்டுக்கொண்டிருந்த ஒரு கம்பெனியாருடையது என அறிகிறேன். அது ஊர்ஜிதமான செய்திதானா? அல்லது