கலைஞரின் சட்டமன்ற உரைகள்
அ
51
திரு. வெங்கட்டராமன் அவர்களும், அமைச்சர் திரு. ராமையா அவர்களும் கூடுகிறார்கள். எங்கே? இங்கே, செக்கரடேரி யட்டிலா? அல்ல. முதல் அமைச்சருடைய இல்லத்திலா? அல்ல. காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் தலைவர் திரு. திரு. காமராஜ் அவர்களுடைய வீட்டிலே கூடுகிறார்கள். உணவுப் பிரச்சினையைப் பற்றி அங்கே விவாதிக்கிறார்கள். சென்றவர்கள் மந்திரிகள் மாத்திரமல்ல, அதிலே குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டு என்னவென்றால், இந்தச் சர்க்காருடைய பிரதம காரியதரிசி திரு.செட்டூர் அவர்களே அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருக் கிறார்கள். ரெவின்யூ போர்டினுடைய முதல் மெம்பர் திரு. வர்கீஸ் அவர்களும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறார்கள். Code of Conduct of Government Servants என்று நிர்ணயிக்கப் பட்டிருக்கிறதே அதற்கு மாறாக திரு. செட்டூர் அவர்களும், திரு. வர்கீஸ் அவர்களும் உணவுப் பிரச்சினையைப்பற்றி விவாதிக்க ஒரு கட்சித் தலைவரின் வீட்டிற்குச் சென்றிருக் கிறார்கள் என்றால் இந்த அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்று கூறுவதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டுமென்று நீங்கள் கேட்கிறீர்கள். (எதிர்க்கட்சித் தரப்பில் ஆரவாரம்). நான் கேட்கிறேன், அது மாத்திரம் அல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த கண்ணதாசன் அவர்களுடைய அன்னையார் இறந்து விட்டதற்காக அனுதாபக் கடிதம் எழுதிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் அதனால் பாதிக்கப்பட்டார். ஒரு அரசியல் கட்சியிலிருந்த உறுப்பினர் ஒருவருடைய தாயார் இறந்ததற்காக ஒரு சர்க்கார் சிப்பந்தி அனுதாபக் கடிதம் எழுதினார் என்பதற்காக எத்தகைய ஒரு நடவடிக்கையை எடுத்துக் கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இன்றைய தினம் நடந்திருக்கிற தவறை எண்ணிப் பாருங்கள். அதன் தொடர்பாக இன்னொரு குற்றச் சாட்டையும் சொல்ல விரும்புகிறேன். அருமைத் தலைவர் திரு. காமராஜ் அவர்களுடைய பிறந்த நாள் விழா சென்னை நகரிலும் மற்ற இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது தமிழகத்தில் பிறந்த தமிழன் ஒருவனுடைய பிறந்தநாள் விழாவை அகில இந்தியாவிலும் கொண்டாடப்படுவது பற்றி நாங்களும் பெருமைப்படுகிறோம், வாழ்த்துகிறோம். அந்த வகையில்தான்,