உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நாவலர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத்

தீர்மானம்

உரை : 62

நாள்: 05.08.1966

கலைஞர் மு. கருணாநிதி : கனம் அவைத் தலைவர் அவர்களே, எதிர்க் கட்சிகளின் சார்பில் எங்கள் கட்சித் தலைவர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களால் 'இந்த மந்திரி சபை மீது நம்பிக்கையில்லை' என்று கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை ஆதரித்து என்னுடைய கருத்துக்களைச் சொல்ல பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆளும் கட்சி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து, இங்கே பேசிய நண்பர்கள் அத்தனைபேரும் "இவ்வளவுதானா குற்றச் சாட்டுகள், இந்தக் குற்றச்சாட்டுக்களுக்குத்தானா நம்பிக்கை யில்லாத் தீர்மானம்" என்று இரண்டு நாளாகப் பேசியிருக் கிறார்கள். அவர்கள் பேசியதை பார்க்கிற நேரத்திலே உள்ளபடியே எனக்கு வருத்தம் ஏற்படவில்லை. அவர்களே மிக்க வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்கள் என்றும், “ஏராளமான குற்றங்கள் இருக்கின்றனவே, அவற்றையெல்லாம் ஏன் எடுத்துச் சொல்லவில்லை" என்ற தோரணையில், "இவைகள்தானா? இவைகள்தானா?” என்று தாங்கள் அடக்கிவைத்திருக்கும் பெருமூச்சை வெளியிட்டார்கள் என்றும் எண்ணிக்கொண்டேன் (சிரிப்பு). காங்கிரஸ் கட்சியிலே அங்கம் வகிக்கும் அநேகருக்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மனதார எண்ணம் இருந்தாலும்கூட, கட்சிக் கட்டுப் பாட்டுக்கு அடங்கி, அதன் காரணமாக, வெளிப்படையாகக் காட்ட முடியாமல் தவிக்கிறார்கள் என்பது நன்கு வெளிப் படுத்தப்பட்டது. அதற்கு மிக, மிக எடுத்துக்காட்டாக, காங்கிரஸ்