88
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அழகான பேட்டி இரண்டு பக்கங்களில் வெளியிடப்படுகிறது என்றால், அது மந்திரிகளுக்கிடையேயே ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லையென்பதைத்தானே காட்டுகிறது. ஒருவருக் கொருவர் மட்டுமல்ல, அவர்களுக்குள்ளே நம்பிக்கை இல்லை.
திரு. பூவராகன் அவர்கள் சிறை இலாகா மந்திரி; மீன் இலாகா மந்திரியும்கூட. மீன் இலாகா மந்திரி படகுகள் கட்டுவதற்காகக் கட்டைகள் வாங்குகிறார்; மிச்சமிருக்கும் கட்டைகளை ஏலம் விடுகிறார். அதை ஒருவர் 20 ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுக்கிறார்; அவ்வாறு அந்தக் கட்டைகளை ஏலத்திற்கு எடுத்தவர் அதை அப்படியே சிறைச்சாலைக்கு விறகாகக் கொடுக்கிறார். ரூபாய் 20-க்கு ஏலத்திற்கு எடுத்து சிறைச்சாலைக்கு 80 ரூபாய்க்குக் கொடுக்கிறார். இந்த மந்திரி சபையிலே ஒரு மந்திரி இன்னொரு மந்திரியை நம்பவில்லை; ரு ஒரே மந்திரி தன்னையே நம்பவில்லை. இவ்வாறு 20 ரூபாய்க்கு விற்ற அதே கட்டைகளை 80 ரூபாய்க்குச் சிறைச்சாலைக்காக வாங்குகிறார்.
நாவலர் அவர்கள் ஆட்சிமொழிபற்றிக் கூறினார்கள். கனம் முதலமைச்சர் அவர்கள் குறுக்கிட்டு, 'சட்டம் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?' என்று கேட்டார். பிறக்கப் போவது, பிள்ளையா? பெண்ணா? இரண்டுமில்லையா? பெறுவீர்களா தெரியவில்லை. மாதம் பத்து முடித்து பல மாதமாகிறது மாட்டைத் தண்ணீரில் போட்டுக்கொண்டா விலை பேசுவது? சட்டம் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டார்கள். சட்டத்திலே எது வரப்போகிறது?
இதே முதலமைச்சர் அவர்கள், இந்த நாடு ரணகளமான நேரத்தில், பிணங்கள் விழுந்த நேரத்தில், மாணவர்களுடைய மார்புகள் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நேரத்தில், என்ன பேசினார்கள்? "ஆங்கிலமும் இந்தியும் நிரந்தர ஆட்சி மொழிகளாக இருக்கலாம்" என்று பேசினார். இவ்வாறு கூறிவிட்டு, "இந்த என்னுடைய யோசனையைக் கல்கத்தாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு. சி. எஸ். வரவேற்றுள்ளார்” என்று முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். நீங்கள் கொண்டு வருகிற ஆட்சி மொழிச் சட்டத் திருத்தத்திலே