90
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
செய்துகொண்டிருக்கிறார்கள். ரஷ்யாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்குப் போகட்டும், ஜப்பானுக்கும் செல்லட்டும். அவர் வெளிநாடுகளிலே வெற்றி உலா வருகிறார் என்றால், ஒரு தமிழனுக்குக் கிடைக்கிற பெருமையைக் கண்டு நாங்கள் மன மகிழ்வு அடைகிறோம். அவர் அங்கு ஒரு விவசாயப் பண்ணையைப் பார்வையிட்ட நேரத்தில் ஒரு விவசாயப் பெண் 'எங்கள் நாட்டைப் போல் உங்கள் நாட்டிலும் பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா?" என்று கேட்டார்கள். 'எங்கள் நாட்டில் பெண்களுக்குப் பெருமையளிக்கிறோம்; அதன் காரணமாகத்தான் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் பிரதமராக இருக்கிறார்கள்” என்று திரு. காமராஜர் கூறியிருக்கிறார். இவ்வாறு பெண்ணுக்குப் பெருமையளிக்கும் துணைக் கண்டத்தில், குறிப்பாகத் தமிழகத்திலே வறுமை இல்லை, வாட்டம் இல்லை, தற்கொலைச் சாவுகள் என்று கூறப்படுவனவெல்லாம் கற்பனைக் கதைகள் என்று ஆளும் கட்சியினர் பேசுகிறார்கள். இந்தத் தமிழ் மண்ணில், குரோம் பேட்டையில் தங்கவேலு நாயக்கருடைய மனைவி பாஞ்சாலம்மா, மகன் இன்பவடிவேல்; சக்தி வடிவேல், மகள் அமுதவல்லி; கனகவல்லி - இவர்கள் பிழைப்புக்கு வழி இல்லாமல், இருந்த சைக்கிளை விற்று, கடைசியாக வேறு வழி இல்லாமல், வறுமை மேலிட்டு, வாட்டம் தேங்கிய விழியோடு, பாஞ்சாலம்மா மூன்று குழந்தைகளுடன் ரயில்வே கேட்டுக்கு அருகில் வந்து ஒளிந்து நின்று ரயில் வருகின்ற நேரத்தில் எட்டு வயது இன்ப வடிவேல், ஐந்து வயது நிரம்பிய அமுதவல்லி, சின்னஞ்சிறு குழந்தை கனகவல்லி ஆகியோருடன் தண்டவாளத்தை நோக்கிப் பாய்ந்தவுடன் அவர்கள் சில்லி சில்லியாகப் பிறித்தெறியப்பட்டனர். கைகள் கால்கள் சின்னாபின்னம் செய்யப்பட்டன. வாழவேண்டுமென்று கணவன் கரம்பிடித்தவள், தன்னுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் ஏற்றம் பெறவேண்டுமென்று கொஞ்சி மகிழ்ந்தவள், தன்னுடைய வயிற்றிலே சுமந்த பெற்ற ரத்தினங்களைத் தானே ரயிலடியில் தள்ளி தானும் விழுந்து இறந்திருக்கிறாள். ஒரு பையனுடைய மூளை மட்டும் தனியாகச் சிதறிக் கிடந்ததாம். ஒருவேளை அவள் அதை ஆட்சியாளர் களுக்காக விட்டுப் போயிருப்பாள்.