கலைஞரின் சட்டமன்ற உரைகள்
101
தேதி மாலை கீரந்தை என்ற கிராமத்தில் ஆயுதங்களோடு சுமார், 1000, பேர்கள் கூடி பக்கத்திலுள்ள கிராமங்களைத் தாக்கினார்கள். அங்கு வந்திருந்த ஆயுதந்தரித்த விசேட போலீஸ் படையையும் கூட்டம் எதிர்த்தது. பின்னால் போலீஸ் ஏழு ரவுண்ட் சுட்டது. அதில் மூன்று பேர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் காயம் அடைந்தனர். இக்கூட்டம் கீரந்தைக்கு செல்லும் வழியில் கூட்டத்தில் ஒரு பகுதியினர் முத்தானந்தல் கிராமத்திலுள்ள வீடுகளுக்கும் தீ வைத்தனர். "இந்த அசம்பாவித சம்பவங்கள் எத்தனை உயிர்களை மாய்த்திருக்கின்றன என்பது பற்றியும், எர்வளவு சொத்துக்கள் இதனால் அழிந்திருக்கின்றன என்பது பற்றியும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன்" நான் அல்ல இப்படிக் கூறுவது, திரு.பக்தவத்சலம் அவர்கள் கூறுகிறார்கள். "இரண்டு பிரிவினருக்கும் நேரிடையாக ஏற்பட்ட தாக்குதல் களின் காரணமாக 18 அரிஜன மக்களும் 8 தேவர்களும் 8 கொல்லப்பட்டனர். அதன்பின் மிகவும் கவலைக்கிடமாக இருந்தவர்களில் 13 பேர்கள் இறந்தனர். அந்த 13 பேர்களும் தேவர்கள். மற்றும் ஒருவர் ஆஸ்பத்திரியில் இறந்தார். ஆக இறந்தவர்கள் 40 பேர்கள். எரிந்த வீடுகள் 2,842. சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம், பரமக்குடி தாலுகாவில் 11,000 ரூபாய். முதுகுளத்தூர் தாலுக்காவில் ரூ.25,000 சிவகங்கை தாலுகாவில் ரூ.2,51,353 அருப்புக்கோட்டை தாலுக்காவில் ரூ.86,350 ஆக ரூ. 3,73.703” இவ்வளவிற்கும் பிறகும் பக்தவத்சலம் அவர்கள் சொன்னார்கள், "பொதுவாக நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவது அரசாங்கத்தின் முக்கிய கடமை என்பது ஒரு பக்கம் இருப்பினும், கஷ்டமடைந்த மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்ப தற்காக அரசாங்கம் இதற்கென்று அமைப்புகளை ஏற்படுத்தி யுள்ளது" என்று குறிப்பிட்டார்கள். அவரையடுத்து சட்ட சபையில் ஒரு அம்மையார் பேசுகிறார். அந்த அம்மையார் என்ன சொன்னார்கள் தெரியுமா? "வீராம்பனில் நடந்த விழாவில் கூட்டம் கூட்டமாக வந்து வீடுகளுக்கு நெருப்பு வைத்தார்கள். கிராமம் கிராமமாகச் சென்று கன்னிப் பெண்களைக் கெடுத்தும், விதவைகளை மானபங்கம் செய்தும், பெண்களை நிர்வாணமாக ஆக்கியும் பல அக்கிரம காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெண்களைக் கற்பழித்திருக்கிறார்கள். கிராமத்தில் 137 வீடுகளை