உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கோர்ட்டுக்குப் போகலாம். எங்கள் மீது என்ன குற்றம் என்று கேட்கலாம்.' என்று இப்படிக் கூறப்பட்டு மக்கள் தூண்டப் பட்டிருக்கிறார்கள். எப்படி சட்டம், அமைதி, ஒழுங்கு பாது காக்கப்படும்? அதற்கு காங்கிரஸ்காரர்கள் உத்திரவாதம் அளிக்க முடியும் என்று கூற முடியுமா? அது மாத்திரமல்ல, நம்முடைய கருத்திருமனிடத்திலே சொல்லியிருப்பதாகவே அவர்கள் பேசியிருக்கிறார்கள்.

'நான் நம்முடைய எம்.எல்.ஏ.க்களுக்குச் சொல்கிற யோசனை நீங்கள் சட்டமன்றத்தில் "வாக்கவுட்” செய்யுங்கள். பதில் வரவில்லை என்றால் ரகளை பண்ணுங்கள். இதற்கு ஒரு முடிவு தேட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி. கருத்திருமன் அவர்களிடம் சொன்னேன். மானை அடிக்க ஒரு மெல்லிய பிரம்பு. மாட்டை அடிக்கும்போது பெரிய பிரம்பு. யானையை அடிக்கும் போது ஒரு தடி. எங்கே எந்தத் தோலுக்கு உறைக்குமோ அந்த அளவுக்கு தட்டினால்தான் விஷயம் புரியும்” என்று பேசி இருக்கிறார்கள்.

அது மாத்திரம் அல்ல, இன்னும் ஒரு பயங்கரமான விஷயத்தைப் பேசி இருக்கிறார்கள். "1963ல் இன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் மைத்துனர் சி.எஸ்.ஜெயராமன் ஏப்ரல் மாதத்தில் இலங்கை சென்று இருந்தார். அங்கே அவர் பேசியதாவது; '1969 ஏப்ரல் மாதத்திற்குள் கருணாநிதி முதலமைச்சர் ஆவார்' என்று, ஆகவே இதிலிருந்து திட்டம் இட்டு அண்ணாதுரை கொல்லப்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது" என்ற அளவுக்குப் பேசுகிறார்கள்? பேசி விட்டு, சட்டம், ஒழுங்கு அமைதி பாதுகாக்கப்படவேண்டு மென்று கூறுகிறார்கள் என்றால் உள்ளபடியே அவர்களுக்கு அப்படி சட்டம், ஒழுங்கு, அமைதி பாதுகாக்கப்படவேண்டு மென்பதிலே நாட்டம் இருக்கிறதா என்பதைத்தான் நான் எதிர்க் கட்சித் தலைவரை கேட்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு அந்தக் கருத்துக்கள் உடன்பாடானவைகள் அல்ல. ஆனால் உடன்பாடு மாறியவர்கள் தன்னுடைய கட்சியிலே இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. நான் அவரிடத்திலே நம்பிக்கை வைத்திருக்கிறேன்.