உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

((

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

யார் வளர்த்து விட்டது யார் மீது பாய்கிறது? அவர் களுடைய பத்திரிகைகளிலே வந்திருக்கின்றன இவ்வளவும். எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையாவது விட்டார்களா? அவர் அண்ணியார் அவர்களுக்கு மானியம் கொடுக்க வேண்டுமென்று சொன்ன நேரத்தில் அதைப்பற்றி அவர்களுடைய பத்திரிகையில் எழுதுகிறார்கள். இந்த நிலையில் அண்ணாதுரை, தனது குடும்பத்தாரை 'நிர்க்கதியாய்' விட்டுச் சென்று விட்டார் என்றோ, அந்தக் குடும்பம் ஜீவிக்க, சர்க்கார் 'மானியம்' தரவேண்டும் என்றோ சொல்வது அற்பத்தனமாகும்!" மானியம் தரவேண்டு மென்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அவருக்குக் காங்கிரஸ் கட்சியினுடைய ஏடு அளிக்கின்ற மரியாதை 'அற்பத்தனமாகும்' என்பதாகும். (ஆரவாரம் இது கை தட்டுவதற்காகச் சொல்வதல்ல. உனள்ளபடியே உள்ள உருக்கத்தோடு சொல்கிறேன். அவரைப்பற்றி அந்த வார்த்தைகள் வருகின்றன என்றால் நாளையதினம் காமராஜரைப்பற்றி வர எவ்வளவு நேரமாகும்? இப்படி எழுதுவது, பேசுவது, சட்டம், அமைதி, ஒழுங்கு காப்பாற்றப்படுவதற்கு எந்தவகையிலே பயன்படும் என்று நம்முடைய எதிர்க்கட்சித் தலைவரவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் தயாராக இருக்கிறோம், எங்களு டைய கட்சியிலே உள்ள தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள், நீங்கள் முன் வரவேண்டும். அல்லது நீங்கள் முன்னின்று துணை புரிந்து நாம் அனைவரும் ஒன்று கூடி பேசுவோம், ஒரு நாகரீகமான அரசியலைத் தமிழகத்திலே நடத்துவதற்கு அதுதான் பயன்படும், ஒரு நல்ல பாதையை வகுத்துக் கொள்வோம் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேனே அல்லாமல் வேறு எதற்கும் அல்ல.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு அரசின் சார்பாக ஒரு நீதிபதியினுடைய விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்கிடையிலே மாவட்ட ஆட்சித் தலைவரவர்கள் தொழி லாளர்களுடைய தலைவர்களையும், நிலச்சுவாந்தார்களையும் அதிகாரிகளையும் அழைத்து முறைப்படி ஒரு மாநாடு கூட்டி, அந்த மாநாட்டிலே 4 படி என்று இருந்த இடத்திலே 1/2 படி கூட்டி, 41/2 என்றும், 41/2 படி என்ற இருந்த இடத்திலே 1/2 படி