கலைஞரின் சட்டமன்ற உரைகள்
119
கேரளாவில், தோழர் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் ஆட்சி செலுத்திய நேரத்தில் 58 ஜூலை முதல் 59 ஜூலை முடிய ஒரு ஆண்டுக் காலத்தில் நான்கு துப்பாக்கிப் பிரயோகங்கள், 19 பேர்கள் சாவு. அதே கேரளத்தில் 1967 முதல் 1970 வரையில் இந்த மூன்றாண்டுக் காலத்தில் 15 துப்பாக்கிப் பிரயோகங்கள் 19 சாவுகள் ஏற்பட்டிருக்கிறது
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறவில்லை என்று நான் மறுக்கவில்லை. நடைபெற்றிருக்கிறது. தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் அந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றிருக்கிறது என்பதையும் அப்படி நடைபெற்ற நேரத்திலெல்லாம் அரசுக் கட்டிலில் வீற்றிருக்கும் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம் என்பதையும், ஆனால் முன்பெல்லாம் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்ற நேரங்களில் அதைப்பற்றி அவர்கள் அதிர்ச்சியடையாமல், “சுடுகிற இடத்திற்குப் போனால் சுடாமல் என்ன செய்யவேண்டும்?” என்கிற அளவிற்குப் பதில்கள் தரப்பட்ட ஆட்சி அந்தக் காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. எவ்வளவோ கிளர்ச்சிகள் நடைபெற்றன.
தொழிலாளர்கள் பற்றிச் சொன்னார்கள், தொழிலாளர் களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பிறகு கிளர்ச்சிகள் நடைபெற்றன என்று. இதில் வேடிக்கை என்னவென்றால், குறிப்பிட்ட சில கிளர்ச்சிகளும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் இந்த அரசால் கவனிக்கப்பட்டு அவர்களுடைய முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பேச்சுவார்த்தைகள் முடிவுற்று அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் தொடங்கியிருக் கின்றன. இதை மிக நன்றாக உணருவீர்கள் என்று கருதுகிறேன்.
மின்சாரவாரிய ஊழியர்களை எடுத்துக்கொள்ளுங்கள். மின்சாரவாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு வேண்டுமென்று கேட்ட நேரத்தில் நான் அவர்களோடு நான்கைந்து நாட்கள் பேச்சு வார்த்தைகள் நடத்தி, மின்சார வாரியத்துறை அமைச்சர் அவர்கள், நான், வாரியத் தலைவர் அவர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அதில் கழகப் பிரதிநிதிகளும் உண்டு, வலதுசாரி கம்யூனிஸ்ட்